‘உனக்கு அறிவே இல்லை’ என்று யாராவது உங்களிடமோ அல்லது உங்கள் பக்கத்தில் இருப்பவரிடமோ கூறினால்,‘முதலில், அறிவு என்றால் என்ன?’ என அவரிடம் கேளுங்கள்.
எல்லோருக்கும் பலவிதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன. அதில் நம்முடைய பலம் எது என்பதை அறிய நாமே நம்முடைய திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும் எனச் சென்ற வாரம் பார்த்தோம்.
மொழித் திறனில் மிளிரும் நபரா நீங்கள் என்பதை இந்த வாரம் சோதித்துப் பார்க்கலாம் வாருங்கள்!
நாம் வாரா வாரம் ஒன்றன் பின் ஒன்றாக 8 விதமான திறன்களைப் பற்றிப் பேசப்போகிறோம். ஆனால் அவற்றுக்கிடையில் எத்தகைய படிநிலையும் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் மொழியின் மீது ஆர்வம் உடையவரா என்பதை கீழ் வரும் வினாக்கள் உங்களுக்கு உணர்த்தும்.
உங்களுக்குள்...
உங்களுக்குப் பிடித்தது பேச்சா அல்லது எழுத்தா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். கவிதை, கதை, கட்டுரை போன்ற எழுத்து வடிவில் மொழி ஆர்வத்தை வெளிப்படுத்துவது உங்கள் விருப்பமானால் உங்களுக்குள் ஒரு பகத்சிங்கோ, பாரதி யாரோ, அவ்வையாரோ, ஜெயகாந்தனோ, அருந்ததி ராயோ, உட்கார்ந்திருக்கலாம்.
பேச்சு என் மூச்சு
அதே நீங்கள் பேச்சுத் திறனில் விட்டு விளாசுவீர்கள் என்றால் நீங்கள் மூச்சிவிடாம பேசும் டிடி போன்ற வி ஜே, ‘டொண்ட டண்ட டைன்’ என்று படபடவெனப் பொரியும் எஃப் எம் பாலாஜி. ‘அன்புத் தாய் மார்களே, அருமைப் பெரியோர்களே’ என்னும் சாலமன் பாப்பையா போன்ற மேடைப் பேச்சாளர், தந்தை பெரியார் போன்ற அரசியல் சித்தாந்தவாதி, அஜிதா போன்ற வக்கீல் என யாராக வேண்டுமானால் ஆகலாம். அல்லது ஒரு டிவி விளம்பரத்தில் வருவது போல “நீ அடுத்த ஷேக்ஸ்பியராக ஆசைப்படுகிறாயா?” என ஆசிரியை சன்னலுக்கு வெளியே இருக்கும் மரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வகுப்பு மாணவியை அதட்ட, அதற்கு அவள் “இல்லை மிஸ்! நான் முதல் அனிதாவாக ஆசைப்படுகிறேன்” என்பதைப் போல நீங்கள் முதலில் நீங்களாக ஆகலாம்.
வேலை கிடைக்குமா?
முன்பெல்லாம், ’நான் ஒரு கவிஞர், அல்லது எழுத்தாளர்’ என்று யாரேனும் சொன்னால், ‘பிறகு பிழைப்புக்கு என்ன பண்ணுரீங்க?’ என்று கேலியாகக் கேட்பார்கள். இப்படியான பயத்தினாலேயே பல பேர் பிழைப்புக்கு ஒரு படிப்பு, விருப்பத்திற்குக் கலை, இலக்கியம் என்று வாழ்க்கைத் தடத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் உங்கள் மொழித் திறனை வளப்படுத்தினால் அது உங்களை வேறு நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும். பத்திரிகையாளர், விளம்பரத்துறையில் காப்பி ரைட்டர், பத்திரிகை நிருபர், பண்பலை தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், மேடைப் பேச்சாளர், ஆசிரியர், அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், பேச்சுத் திறன் பயிற்சியாளர் எனப் பல்வேறு துறைகளில் நீங்கள் ஜொலிக்கலாம்.
நான் அவன் இல்லை
பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லை என்ற பதில்தான் உங்களிடம் இருக்கிறதா? “அட நான் என் நெருங்கிய நண்பருக்கு ஃபீல் பண்ணி என் உணர்வைச் சொல்ல நினைத்தால் கூடச் சொந்தமாகச் சிந்தித்து எழுத மாட்டேனே…..சும்மா ஒரு ஃபார்வர்டட் எஸ் எம் எஸ் (forwarded sms) தட்டிவிட்டுறுவேனே” எனச் சொல்லும் நபராக நீங்கள் இருந்தால் நீங்கள் வேற மாதிரியான ஆள் என்று அர்த்தம். எப்படியும் நீங்கள் யார் என்பதை வரும் வாரங்களில் கண்டுபிடித்துவிடுவோம். மொழி திறனாளிகள் எப்படிச் சுவாரஸ்யமான வழிகளில் தங்கள் ஆற்றலைப் பட்டைத் தீட்டி மெருகேற்றலாம் என்பதையும் அடுத்த வாரம் பேசுவோம்.
இதன் மூலம் எல்லோருக்கும் அறிவு இருக்கிறது, அதன் அளவு மட்டுமே வேறுபடும் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago