சேதி தெரியுமா? - பெண்கள் ஹாக்கி அணி வெற்றி

By ஜெய்குமார்

ஹாக்கி தொடர் போட்டிகளுக்காக இந்தியா வந்த பெலாரஸ் அணியை 5-0 என்ற கணக்கில் முழு தொடரையும் வென்று கோப்பையைக் கைப்பற்றியது இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி. ஏற்கனவே தொடரின் நான்கு ஆட்டங்களை இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில் மார்ச் 8-ம் தேதி போபாலில் நடைபெற்ற ஐந்தாவது தொடர் ஆட்டத்திலும் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

லஞ்சத்தில் முதலிடம்

16 ஆசிய-பசிபிக் நாடுகளில் லஞ்சம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதிரி ஆய்வில் இந்தியாவில்தான் மிக அதிகமாக 69 சதவீத மக்கள் லஞ்சம் அளித்திருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு 21 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கில் ஒருவர் மருத்துவம், கல்வி, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைக்காக லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 10 பேருக்கு 7 பேர் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 5 பேருக்கு இருவர் காவல் துறை (39%) மிக அதிகமாக அல்லது முழுவதும் ஊழல்மயமான அமைப்பு எனத் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் 35 – 37 சதவீதம் ஊழல்மயமானவர்கள் என அந்த அறிக்கை சொல்கிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக வியட்நாமில் 65 சதவீதம் மக்கள் லஞ்சம் அளித்திருக்கிறார்கள். தாய்லாந்து 41 சதவீதம், பாகிஸ்தான் 40 சதவீதம், சீனா 26 சதவீதம் என அடுத்த அடுத்த இடங்களில் உள்ளன. இருப்பதிலேயே ஜப்பானில் 0.2 சதவீதத்தினர் மட்டுமே லஞ்சம் அளித்ததாகக் கூறியுள்ளனர். இந்த ஆய்வை ஜெர்மனியைச் சேர்ந்த Transparency International (TI) என்னும் அமைப்புசாரா தொண்டு நிறுவனம் நடத்தியது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்

பிப்ரவரி 5 முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் மார்ச் 11 அன்று அறிவிக்கப்பட்டன. உத்திரப் பிரதேசத்தின் மொத்தம் 403 தொகுதிகளில் பி.எஸ்.பி. 19 இடங்களையும், எஸ்.பி.- காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களையும், மற்றவை 5 இடங்களையும் பெற்றன. இந்நிலையில் 325 தொகுதிகளில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அகிலேஷ் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாபின் மொத்தம் 117 தொகுதிகளில் அகாலி தளம் – பாஜக கூட்டணி 18 இடங்களையும், ஆம் ஆத்மி 20 மற்றவை 2 இடங்களையும் பெற்றன.

காங்கிரஸ் 77 தொகுதகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் காங்கிரஸின் அமரிந்தர் சிங் முதல்வர் ஆனார். உத்தராகண்டின் 70 தொகுதிகளில் 11-ஐ காங்கிரஸ் பிடித்தாலும் 57 தொகுதிகளை தடாலடியாக வென்று பாஜக ஆட்சியைப்பிடித்தது. மணிப்பூரில் மனித உரிமை போராளியான இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாப தோல்வியைத் தழுவியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

430 கோடி ஆண்டு பழைய படிமங்கள்

கனடாவில் கடற்பகுதியில் 430 கோடி ஆண்டு பழமையான உயிரினப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள கடலோரப் பகுதியில் இந்த உயிரினப் படிமங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலேயே மிகவும் பழமையானதும் அரிய வகையைச் சேர்ந்தது இது. இன்றைய உயிரினப் பாக்டீரியாக்களைப் போன்று இது காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஐ.என்.எஸ். விராத் ஓய்வு

இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராத் மார்ச் 6-ம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது. 1943-ல் இரண்டாம் உலகப் போரின்போது இந்தக் கப்பல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்காக 1959-ல் முதன் முதலாக இது பயன்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் கடற்படையில் 27 ஆண்டுகாலம் சேவையாற்றியது. 1985-ல் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பிறகு 1987-ல் இந்தியக் கப்பற்படையில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் 30 ஆண்டுகாலம் சேவையாற்றிய பின் இப்போது ஓய்வுபெற்றுள்ளது.

மகப்பேறு சீர்திருத்த மசோதா நிறைவேறியது

வேலைபார்க்கும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 12 வாரங்களாக இருந்தது. அதை 26 வாரங்களாக மாற்றும் சட்டத் திருத்த மசோதா மார்ச் 9-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மத்தியத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். 10, அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் கனடா (50 வாரங்கள்), நார்வே (44 வாரங்கள்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக வாரங்கள் பேறு கால விடுப்பு அளிக்கும் மூன்றாவது நாடானது இந்தியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்