ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை, கால்பந்து வெறும் விளையாட்டல்ல; மதம். கலவர ஆவேசமும் திருவிழா உற்சாகமுமாக மைதானத்திலும் மைதானத்துக்கு வெளியேயும் கோடிக்கணக்கானோரால் வழிபடப்படும் விளையாட்டு கால்பந்து.
உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுத் தொடருக்கு அடுத்த நிலையில் மதிக்கப்படும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பெரும் உற்சாகத்துடன் பிரான்சில் தொடங்கியுள்ளது.
யூனியன் ஆப் யூரோப்பியன் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் இப்போட்டித் தொடரில் கோப்பை வெல்வதைச் சில ஐரோப்பிய அணிகள், உலகக் கோப்பையை வெல்வதைவிட மிகுந்த கவுரவமாகக் கருதுகின்றன. ஏனெனில் யூரோ தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளே மிகுந்த சவால்களும் ஆவேசமும் நிறைந்தவை.
ஐரோப்பிய நாடுகள் கோப்பை
1960-ல் ஐரோப்பியக் கால்பந்து அணிகளில் எந்த நாட்டு அணி, சிறந்தது என்பதை தீர்மானிக்கும் போட்டித் தொடராக யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் உருவானது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் தொடர் பிரான்சில் நடைபெற்றது. அப்போது ஐரோப்பிய நாடுகள் கோப்பை என்றே அழைக்கப்பட்டது. 1968-ல் இது மாற்றப்பட்டது. 1996 முதல் யு.இ.எஃப்.ஏ. யூரோ என்றே இந்தத் தொடர் அழைக்கப்பட்டுவருகிறது.
யூரோ கடந்து வந்த பாதை
யூரோ கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 16-லிருந்து 24-ஆகியுள்ளது. முன்னதாக நடைபெற்ற தொடர்களில் ஒன்பது நாடுகள் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் தலா 3 முறை வென்றுள்ளன. பிரான்ஸ் இரண்டு முறை. சோவியத் யூனியன், இத்தாலி, செக். குடியரசு, இங்கிலாந்து, டென்மார்க், கிரீஸ் ஆகியவை தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.
கடந்த முறை சாம்பியனான ஸ்பெயின் அணி இந்த யூரோ தொடரில் பிரிவு டி-யில் செக்.குடியரசு, துருக்கி, குரேஷியா ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
கடந்த முறை ரன்னர் அணியான இத்தாலி பிரிவு ஈ-யில் பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு, ஸ்வீடன் அணிகளுடன் மோதுகிறது.
2016 யூரோவை நடத்தும் பிரான்ஸ், பிரிவு ஏ-யில் ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
மாறிவிட்ட ஆட்டம்
கிரிக்கெட்டைப் போலவே கால்பந்தாட்ட மும் புதிய வடிவத்தை எடுத்துள்ளது. கறாரான உத்திகள், பயிற்சியாளரின் திட்டங்கள், சாதகமாக ஆடவரும் பகுதிகளிலிருந்து வீரர்களை மாற்றி வேறு வேறு இடங்களில் ஆட வைத்தல், நிலையான இடத்தில் அல்லாமல் களத்தில் எல்லா வீரர்களும் எல்லா இடங்களிலும் ஆடும் போக்குகள் என்று கால்பந்து நிறைய மாறிவிட்டது.
முன்பெல்லாம் மைய முன் கள வீரராகச் சிலர் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் அந்த இடத்தில்தான் ஆடுவார்கள். வீரரை மாற்றும்போதுகூட எந்த இடத்தின் வீரர் மாற்றப்படுகிறாரோ அந்த இடத்துக்கான இன்னொரு மாற்று வீரரையே அனுப்புவார்கள், இப்போது இதெல்லாம் மாறிவிட்டன.
ஒரு கோல் அடித்த பிறகு பாதுகாப்பு ஆட்டம் ஆடுவது, பந்தைத் தங்களுக் குள்ளேயே பாஸ் செய்துகொள்வது என்ற மந்த நிலையும் இந்தக் காலக் கால்பந்தாட்டத்துக்குச் சொந்தமானது. இத்தகைய அணுகுமுறை தென் அமெரிக்காவைவிட ஐரோப்பியாவில் கொஞ்சம் தூக்கலாக உள்ளது.
பல புதிய சாதனைகளைப் படைக்கும் முனைப்புடன் இந்த ஆண்டு யூரோ தொடர் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago