வரலாறு தந்த வார்த்தை 33: வண்ண’ கொடி கட்டு..!

By ந.வினோத் குமார்

#377..!இதுதான் கடந்த வார ‘டாக் ஆஃப் தி கன்ட்ரி!’. பாலினச் சிறுபான்மையினர் இவ்வளவு காலம் எதிர்கொண்டு வந்த சட்ட ரீதியான அடிப்படைத் தடை தகர்த்தெறியப்பட்டுள்ளது. ஏளனமாகப் பார்க்கப்பட்டவர்களை கெத்தாக நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

அந்தத் தீர்ப்பு வந்த நாளில், பலரும் வானவில் நிறங்களைக் கொண்ட கொடியைக் கைகளில் ஏந்தி ஊர்வலம் வந்து கொண்டாடியதை, ஊடகங்களில் பார்த்திருக்கலாம்.

நிறங்களும் தன்மைகளும்

ஏன் அந்த வானவில் கொடி? அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்தவர் கில்பெர்ட் பேக்கர். ராணுவ வீரர், ஓவியர் எனப் பல முகங்கள் கொண்ட இவர், தன்பாலின ஈர்ப்பாளரும்கூட. 1974-ல், தன்னைப் போலவே தன்பாலின ஈர்ப்புக்கொண்டிருந்த அமெரிக்க அரசியல்வாதி ஹார்வே மில்க் என்பவரைச் சந்தித்தார் கில்பெர்ட். மில்க் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தக் கொடியை வடிவமைத்தார் கில்பெர்ட்.

நாடு, மொழி, இனம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து, உலகம் முழுவதும் இருக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை ஒரு குடைக்குள் கொண்டு வந்து, ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக வானவில்லில் உள்ள ஏழு நிறங்கள், இந்தக் கொடியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஏழு நிறங்களும் ஏழு தன்மைகளைக் குறிக்கின்றன. பிங்க் நிறம் பாலினத்தையும், சிவப்பு நிறம் வாழ்க்கையையும், செங்காந்தள் (ஆரஞ்சு) நிறம் ஆற்றுப்படுத்துதலையும், மஞ்சள் நிறம் சூரிய ஒளியையும், பச்சை நிறம் இயற்கையையும், டர்காய்ஸ் (நீலப் பச்சை வண்ணம்) நிறம் கலையையும், இண்டிகோ (கருநீலம்) நிறம் ஒற்றுமையையும், ஊதா நிறம் ஆன்மாவையும் குறிக்கின்றன. 1978-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ‘தன்பாலின ஈர்ப்புச் விடுதலைப் பேரணி’யில், முதன்முதலாக இந்தக் கொடி பறந்தது.

வானவில் கொடி விஷயம் ஓ.கே!. ஆனால், இதுபோன்ற பல வண்ணக் கொடிகளை வைத்துத்தான், ஆங்கிலத்தில் ‘With flying colours’ எனும் சொற்றொடர் உருவாகி இருக்கிறது என்பது, எவ்வளவு ஆச்சரியமானது!

வெற்றியின் அடையாளம்

 18-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை, கப்பல்தான் முதன்மை போக்குவரத்துச் சாதனம். போருக்கான சாதனமும் அதுவே! போருக்குச் செல்கிற கப்பல்களில் எல்லாம் கொடிகள் பறந்துகொண்டிருக்கும். போர் முடிந்து, தங்கள் நாட்டுக்குத் திரும்பும் கப்பலில், கொடி பறந்தால், அந்த நாடு போரில் வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம். மாறாக, கொடி இல்லாமல் நாடு திரும்பினால், போரில் ‘கோட்டை’விட்டது என்று அர்த்தம்.

அந்தக் கால ஆங்கில மொழியில், ‘கலர்ஸ்’ எனும் வார்த்தையைக் கொடிகளைக் குறிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலே கொடி பறக்க, தங்கள் நாட்டுக்கு கப்பல் திரும்பி வரும்போது, ‘came out / came through with flying colours’ என்று மக்கள் அழைத்தார்கள். அதாவது, வெற்றி வாகை சூடி வருகிறது என்பது பொருள். ஒருவர் வெற்றி பெற வாழ்த்துவதற்கும் ‘come out / come through with flying colours’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்கள். இப்படி, கொடியிலிருந்து பிறந்தது / பறந்ததுதான் அந்தச் சொற்றொடர்.

ஆக… பாலின சிறுபான்மையினர் இப்போது யாருக்கும் அஞ்சாமல்,

‘வண்ண’ கொடி கட்டலாம்தானே..!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்