கேட்டாரே ஒரு கேள்வி
நர்ஸாகப் பணிபுரியும் ஒருவகைப் பிரிவினருக்கு Midwife என்று பெயர் வைக்கலாமா? ‘Sister’-ஐ இப்படி அவமானப்படுத்துவது ஏன்?
**************
இரு வாரங்களுக்கு முன் >50 = 45 என்ற புதிரை விடுவிக்கச் சொல்லி இருந்தேன். ஜென் தத்துவத்திலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாத கணிதக் கோணங்கள் வரை என்னென்னவோ பதில்கள் வந்திருந்தன. முழுக்க முழுக்க ஆங்கிலம் தொடர்பான புதிர் அது என்பதை நான் குறிப்பிட்டிருந்தேன். “உலகுக்கு இந்தியர்களின் நன்கொடையான எண்’’ எதுவோ அவ்வளவு பேர்தான் சரியான விடையை அனுப்பி இருந்தார்கள்.
‘யாரும் சரியான விடையை அனுப்பவில்லை’ என்பதால் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறேன். அதே பாணியில் நான் முன்பு கொடுத்த மேற்படி புதிரை விடுவிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
TEA = ATE
**************
Rat, mouse இரண்டும் ஒன்றா?
இல்லை. Rat என்பது கொஞ்சம் பெரிய அளவு கொண்டது. Rat என்பதிலேயே பல வகைகள் உண்டு. கங்காரு எலி, நார்வே எலி, கருப்பு எலி என்று பல விதங்கள்.
மவுஸ் என்பது ஏதோ சிட்டுக்குருவிபோல் சிறியதாக இருக்கும். வீட்டு மவுஸ், வயல் மவுஸ் என்று இதிலும் பல வகைகள் உண்டு.
சுற்றி வளைக்காமல் நேரடியாகச் செல்வதானால் rat என்பதை எலி என்றும், mouse என்பதைச் சுண்டெலி என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒன்று, விலங்கியலின்படி rat, mouse என்றெல்லாம் பிரிக்கப்படவில்லை.
பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன என்பது தெரியுமா? Bandicoot (அப்படியானால் ஊழல் பெருச்சாளிகளை ஒரே சொல்லில் எப்படிக் குறிப்பிடலாம் என்பது உங்களுக்கே தெரியும்).
**************
பிரெஞ்சு மொழியில் Mid என்றால் ‘கூட’ (with) என்று பொருள். Wife என்றால் ‘பெண்மணி’. பிரசவத்தின்போது அதற்கு உதவும் ‘(தாயின்கூட இருக்கும்) பெண்மணியை Mid-wife என்று அழைத்தார்கள். அவ்வளவே. மற்றபடி கொதிப்படைய வேண்டாம்.
**************
‘NYM’ என்றால் சொல் அல்லது பெயர் என்று பொருள் கூறியிருக்கிறீர்கள். Acronym என்பதன் அடிப்படை என்ன?
“நண்பரே, acronym என்பதன் அடிப்படையைக் கூறுவதற்கு முன் abbreviation என்பதற்கும், acronym என்பதற்கும் உள்ள வேறுபாட்டை (மீண்டும்) தெரிந்துகொண்டு விடலாம்.
Examination என்பதை Exam. என்பது abbreviation. Abbreviation என்பதை abbrn. என்று எழுதுவதுகூட abbreviationதான்! Abbreviationகளைத் தொடர்ந்து ஒரு புள்ளி வைத்தாக வேண்டும்.
Acronym என்பது சொற்களின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்குவது. Amateur Athletics Federation of India என்பதை AAFI என்பது acronym. (Board of Control for Cricket in India என்பதன் acronym BCCI என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்). Acronymsகளை capital lettersல்தான் எழுத வேண்டும். அதற்குப் பிறகு புள்ளி இடம் பெறாது (அது அந்த வாக்கியத்தின் இறுதி சொல்லாக இருந்தாலொழிய).
கிரேக்க மொழியில் acronym என்றால் ‘உயர்ந்த சொல்’ என்று பொருள். எல்லா எழுத்துகளும் Capital lettersல் இருப்பதால் இந்தப் பெயர் வந்ததாக வைத்துக் கொள்ளலாமா?
இந்த இடத்தில் anatonym என்பது குறித்தும் கூற வேண்டும். நம் உடலின் ஒரு பகுதியை verb-ஆகப் பயன்படுத்தினால் அது anatonym. “You have to face the consequences’’ (விளைவுகளை நீதான் எதிர்கொள்ள வேண்டும்) என்ற வாக்கியத்தில் உள்ள face என்பது anatonym. Toe the line என்பதும் அப்படித்தான். கார்ட்டூனில் வேறு சிலவற்றையும் உங்களால் காண முடியும்.
**************
Tea = ate எனும்போது அவை anagrams என்பது புரிகிறதல்லவா? அதாவது ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைத்தால் மற்றொரு சொல் வருகிறது. மேற்கூறிய புதிரின் விடையும் இந்த வகைதான்.
OVER FIFTY = FORTY FIVE
english 2jpg100
போட்டியில் கேட்டுவிட்டால்?
The soldiers were instructed to _________ restraint and handle the situation peacefully.
(a) control
(b) enforce
(c) prevent
(d) remain
(e) exercise
Restraint என்றால் கட்டுப்பாடு.
அதாவது கட்டுப்பாட்டு உணர்வைக் கடைப்பிடித்துச் சூழலை அமைதியுடன் கையாளுமாறு ராணுவ வீரர்களுக்குக் கட்டளை இடப்பட்டது. இதுதான் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் உணர்த்துகிறது.
**************
Control restraint என்பது சரியல்ல. ஏனென்றால், அது கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவது ஆகிவிடும். Enforce restraint என்பது கட்டுப்பாட்டைச் செயலாக்குவது என்ற பொருளில் வருகிறது. இது ஓரளவு பொருந்தும்தான். Prevent restraint என்றால் கட்டுப்பாடு இல்லாமல் அதைத் தவிர்ப்பது என்று அர்த்தமாகி விடுகிறது.
Remain restraint என்றால் ஏற்கெனவே கட்டுப்பாடு இருப்பதாகவும், அது தொடர வேண்டும் என்றும் ஆகிறது.
அனைத்தையும் விடச் சிறப்பாகப் பொருந்துவது exercise என்ற சொல்தான். அது “கட்டுப்பாட்டைக் கையாண்டு” என்ற பொருளை அளிக்கிறது. எனவே The soldiers were instructed to exercise restraint and handle the situation peacefully என்பதுதான் சரியான வாக்கியம்.
சிப்ஸ்
# Incandescent love என்றால்?
உணர்வுபூர்வமான காதல். உருகி உருகிக் காதலிப்பது.
# Petrol hike என்கிறார்களே. Hike என்றால்?
Hike என்றால் ஏற்றம். Petrol hike என்பதைவிட petrol price hike என்பதே சரி.
# Dilemma பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் ‘between the devil and the deep sea’ என்பார்களே அதுவும் dilemmaதானே?
ஆமாம்.
தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 mins ago
சிறப்புப் பக்கம்
15 mins ago
சிறப்புப் பக்கம்
47 mins ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago