ஆங்கில​ம் அறிவோமே 268: மாற்ற முயல வேண்டாம்!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

Goobledygook என்ற சொல்லை எதற்குப் பயன்படுத்துவார்கள்?

இந்தச் சொல்லைச் சொல்லிப் பாருங்கள் (கபுல்டிகுக்). ஏதோ உளறுவது போல இருக்கும்.  சிறுகுழந்தை, குடிபோதையில் இருப்பவர் போன்றவர்கள் எழுப்பும் அர்த்தமில்லாத ஒலியை (பிதற்றல்) மேற்படி சொல்லின் மூலம் விவரிப்பதுண்டு.

வான்கோழி எழுப்பும் ஒலியைக் கொண்டு இந்தச் சொல்  உருவானதாம்.

******************

“ஐ வான்ட் டு டை” என்று ஒருவர் கூறினால் அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது?

அவர் கூறும் சொல்லை die என்பதா அல்லது dye என்பதா என்பதை முதலில் உறுதி  செய்துகொள்ளுங்கள். Die என்றால் “எல்லோரும் ஒருநாள் இறக்க வேண்டியவர்கள்தானே.  ஆனால்...” என்று தொடங்கி ஆறுதல் அளிக்கலாம். மாறாக dye என்றால் “எல்லோருக்குமே ஒருநாள் முடி  வெள்ளையாகத்தானே செய்யும். எனவே...’’ என்று ஆறுதல் அளிக்கலாம்.

Die என்பது dice என்பதன் ஒருமை (தாயக்கட்டை அல்லது பகடை) என்பதையும் மனத்தில் கொள்ளுங்கள்.  A cube of cheese is no longer than a die.

******************

“ஜன்னலில் பொருத்தப்படும் ஒரு பொருளை Venetian Blind என்று கூறுகிறார்களே அதென்ன  Venetian?”

இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரில் ஒரு காலத்தில் அதிகம் தயாரிக்கப்பட்டதால் இப்படி அழைக்கப்பட்டது. அதை ஜன்னலில் பொருத்துவதன் மூலம் உள்ளே வரும் ஒளியைக் கட்டுப்படுத்த முடியும்.   ஒளியைக் ‘காண முடியாமலும் செய்யும்’ என்கிற பொருளில் blind.

மற்றபடி பகுத்தறியாமல் ‘கண்மூடித் தனமாக’ ஒன்றை நம்புவதையோ, ஏற்பதையோகூட blind என்ற சொல்லால் விவரிப்பதுண்டு. Blind acceptance, blind to the realities.                          

******************

 “Encashable cheques என்பதன் பொருள் என்ன?”

காசாக மாற்றக்கூடிய காசோலைகள்!  (Cashable cheques என்றும் கூறலாம்).

உங்களுக்கு ஒருவர் ஒரு காசோலையைத் தருகிறார்.  சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று அதைக் கொடுத்தால் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையை உங்களுக்குக் கொடுத்து விடுவார்கள் என்றால் அது encashable cheque.

மாதாந்திரச் சீட்டு ஒன்றில் சேருகிறீர்கள்.  குறிப்பிட்ட காலகட்டத் துக்குப்பின் நீங்கள் அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும் என்றால், அது encashable.  நகைக்கடைகளில் சீட்டு போட்டால் முதிர்வு காலத்தின் போது அந்தத் தொகைக்கான நகையைத்தான் வாங்கிக்கொள்ள முடியும்.  இது encashable அல்ல.

english-2jpg100 

Tense என்பதற்கு எதிர்ச்சொல்லாக relaxed என்பது சரியான சொல்லா, comfortable என்பது சரியான சொல்லா?  

அது நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது வாசகரே.  நாளைக்கு ஒருவரைத் தூக்கில் போடப்போகிறார்கள் என்றால் அவருக்கு comfortable ஆன படுக்கையைக் கொடுத்தாலும், uncomfortable படுக்கையைக் கொடுத்தாலும் அவர் tense ஆகத்தான் இருப்பார். Relaxed ஆக இருக்க மாட்டார்.

போட்டியில் கேட்டு விட்டால்

Don’t try to change him.  He is ______

(a) infallible

(b) incorrigible

(c) indelible

(d) introspective

(e) ineffective

ஒருவரது இயல்பு காரணமாக அவரை மாற்ற முயல வேண்டாம் எனும் வாக்கியம்.  அந்த இயல்பு எதுவாக இருக்கும் என்பதற்கு விடை காண வேண்டும்.

Infallible என்றால் தவறே செய்ய முடியாத என்று பொருள்.  அப்படி இருப்பவரை யாரும் மாற்ற முயல மாட்டார்கள்.  

Indelible என்றால் அழிக்க முடியாத அளவுக்கு ஒன்றை உருவாக்குவது. Indelible mark என்றால் அழிக்க முடியாத தடயம்.

Introspective என்றால் தனக்குள் ளேயே பல கேள்விகளை எழுப்பி பதில் காண முயலும் தன்மை. Ineffective என்றால் ‘பயனற்ற’. பயனற்றவர்களை மாற்ற முயல்வதுதானே நல்லது.

எனவே, இவை எல்லாவற்றையும் விட incorrigible என்ற சொல் மிக அதிகமாகப் பொருந்துகிறது. Incorrigible என்றால் ‘திருத்தவே முடியாத’.  அப்படிப்பட்ட ஒருவனை மாற்ற முயல்வது வேண்டாத வேலை.

எனவே, Don’t try to change him. He is incorrigible என்பதுதான் சரியான வாக்கியம்.

 

சிப்ஸ்

# Superannuation என்றால்?

வருங்கால பென்ஷனுக்காக  ஊழியர் கள் ஒரு நிதியத்தில் காலந்தோறும் செலுத்திவரும் தொகை.

# A bundleof joy என்றால்?

குழந்தை.

# Thirty rupees is a small sum என்பது சரியா அல்லது thirty rupees are asmall sum என்பது சரியா?

Thirty rupees is a small sum என்பதுதான் சரி.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்