கேட்டாரே ஒரு கேள்வி
Hinduism, Christianity தெரியும். ஆனால், animism என்ற ஒரு வார்த்தையை சமீபத்தில் காண நேர்ந்தது. இது எந்தவகையான மதம்?
“Casino என்ற வார்த்தையிலேயே ‘sin’ ஒளிந்திருக்கிறதைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று வியந்திருக்கிறார் வாசகர் ஒருவர். நமது அடுத்த போட்டிக்கான ஐடியாவை அளித்ததற்கு அவருக்கு நன்றி.
கீழே உள்ள ஒவ்வொரு குறிப்பும் உணர்த்தும் வார்த்தை ‘SIN’ என்று தொடங்குகிறது. கண்டுபிடியுங்கள்.
1. பன்மையல்ல
2. நேர்மையாக
3. தசையை எலும்புடன் இணைக்கும் நார்த்தசை
4. தீமையான
5. யாருடைய உதவியுமின்றி
6. அப்போதிலிருந்து இப்போது வரை
7. அரேபிய இரவுகள் நூலின் கதாநாயகன்
8. வேலை, பொறுப்பு எதுவுமல்லாத அலுவல்
9. அண்டை நாடு ஒன்றிலுள்ள மெஜாரிட்டி மக்கள்
10. பொசுக்கு
உங்கள் விடைகள் நான்கு நாட்களுக்குள் வந்து சேர வேண்டும். உங்கள் பெயருடன் நீங்கள் வசிக்கும் ஊரின் பெயரையும் எழுதுங்கள்.
“Indepth, in-depth, in depth ஆகிய மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன?”
வாசகரே, Indepth என்று ஒன்று கிடையாது. In-depth என்பது adjective. முழுமையான அல்லது மிக ஆழமான என்று இதற்குப் பொருள். In depth என்பது adverb போலப் பயன்படுகிறது.
You can make an in-depth study of a subject by studying it in depth.
Stern என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதுதான் sternum என்பதா?
வாசகரே, stern என்றால் சீரியஸாக என்று அர்த்தம். She looked stern என்றால் அவள் முகம் சீரியஸாக இருந்தது என்று பொருள் (கொஞ்சம் கடுகடுவென்று கண்டிப்புடன் இருந்தது என்றும் வைத்துக்கொள்ளலாம்). A smile transformed his stern face எனும்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது அல்லவா?
Sternum என்பது மார்பெலும்பு. மார்பின் நடுப் பகுதியில் அமைந்துள்ள நீண்ட தட்டையான எலும்பு. இதயம், நுரையீரல்கள் போன்றவற்றுக்கு இது பாதுகாப்பாக விளங்குகிறது.
எலும்பு டிபார்ட்மெண்டில் உள்ள பிற உறுப்புகளின் பெயர்களையும் அறிந்துகொள்வோமா?
Pelvis என்பது இடுப்பு வளைய எலும்பு. எல்விஸ் பிரெஸ்லி என்பவர் ராக் அண்டு ரோல் மன்னன் என்று போற்றப்பட்டார். இவர் இடுப்பு அப்படி வளையுமாம்! எனவே, இவர் Elvis the Pelvis என்று அழைக்கப்பட்டார்?
Femur என்பது தொடை எலும்பு. மனித உடலில் மிக நீளமான எலும்பு இதுதான்.
மற்றபடி marrow என்பதும் எலும்புடன் தொடர்புடையதுதான். Bone marrow என்றால் எலும்பு மஜ்ஜை. அதாவது எலும்புகளின் உள்ளே காணப்படும் மென்மையான பகுதி. இங்கிருந்துதான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்த தட்டணுக்கள் (platelets) ஆகியவை உருவாகின்றன.
‘கேட்டாரே ஒரு கேள்வி’ நண்பரே, ‘ism’ என்று முடியும் வார்த்தைகளெல்லாம் மதங்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. Ism என்றால் ஒரு தனித்துவம் கொண்ட தத்துவம் அல்லது இயக்கம் அல்லது அரசியல் கொள்கை. Modernism, Communism போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதல்லவா? தவிர, கிறிஸ்தவ மதத்தை Christianism என்று சொல்வதில்லை. அது Christianity.
இப்போது animism-த்துக்கு வருவோம். தாவரங்கள், விலங்குகள், பாறைகள், மின்னல்-இடி போன்றவற்றில் கொண்டுள்ள நம்பிக்கையைத்தான் animism என்பார்கள். குறிப்பாக, உயிரற்றதாகக் கருதப்படுவதை உயிருள்ளதாக எண்ணும் நம்பிக்கை. He does not support animism because he feels rocks do not have any kind of vitality.
“Identikit என்று ஒரு வார்த்தையைப் படித்தேன். அதற்கு என்ன பொருள்?”
ஏதாவது குற்றம் நடந்துவிட்டால் குற்றவாளியைப் பார்த்தவர்களிடமிருந்து அவரது தோற்றத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பார்கள். “சுமார் 30 வயது, மாநிறம். மேல் உதட்டுக்கு மேல் ஒரு பரு இருக்கும். நெற்றியில் ஒரு தழும்பு இருக்கும்’’ இப்படியெல்லாம் தகவல்களை கொடுப்பதைவிட மேற்படித் தகவல்களைப் படமாக வரைந்தால் அவற்றைப் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். அடையாளம் காண்பதற்காக இப்படி வரையப்படும் - ஒளிப்படத்தைப் போன்று இருக்கிற - படத்தைத்தான் identikit என்பார்கள்.
Exertainment என்றால் என்ன?
உடற்பயிற்சி தேவைப்படும் வீடியோ விளையாட்டுகளை ஓடவிட்டு அவற்றுக்கு ஆடுவதைத்தான் exertainment என்கிறார்கள். அதாவது exercise + entertainment.
சமீபத்தில் இப்படி இரு வார்த்தைகள் இணைந்து உருவாகும் வார்த்தைகள் அதிகரித்துவிட்டன.
சில எடுத்துக்காட்டுகள்:
Freemium (Free + premium). அதாவது அடிப்படை சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகத் தந்துவிட்டு முன்னேறிய சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறைகளை freepremium என்கிறார்கள்.
Smirting. பல அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் புகைக்க அனுமதிப்பதில்லை. அதனால் வெளியே வந்து புகைபிடிப்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு நட்பை வளர்த்துக்கொள்வதை smirting என்பார்கள். Smoking + flirting.
Flirting என்றால் ஒருவரிடம் பாலியல்ரீதியாகக் கவரப்பட்டதுபோல் நடந்துகொள்வது. இதில் உண்மையான காதல் நோக்கம் இருக்காது. She began to tease him, flirting with other men in front of him.
Underground operation என்பது திட்டமிடலைக் குறிக்கிறதா?
நிலத்துக்குக் கீழ் என்றால் underground. அந்தப் பகுதியில் நடக்கும் செயல்பாடு underground operation.
ஆனால், go underground என்றால் ரகசியமாக இருப்பது அல்லது தலைமறைவாவது என்று பொருள்.
They were forced to go underground by the government. அப்படித் தலைமறைவாக இருந்தபடியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் underground operation.
தொடக்கம் இப்படித்தான்
அமெரிக்க அரசை Uncle Sam என்கிறார்களே, எதனால்?
பெரும்பாலும் கிண்டலாகத்தான் அப்படிக் கூறுவார்கள். என்றாலும் இதற்கு ஒரு பின்னணி உண்டு.
1812-ல் நியூயார்க்கைச் சேர்ந்த சாமுவேல் வில்சன் என்பவர் அரசுக்கு இறைச்சி விற்று வந்தார். ஒவ்வொரு இறைச்சியையும் தானே நேரடியாக தரத் தேர்வு நடத்தியதற்கு அடையாளமாக ‘Wilson US’ என்ற தனது பெயரைப் பதிப்பார். நல்ல குணம் கொண்டவராக இருந்த அவரை ‘Uncle Sam Wilson’ என்று பலரும் கூப்பிடத் தொடங்கினார்கள். பின்னர், Uncle Sam என்பது அமெரிக்க அரசைக் குறிப்பிடும் சொற்களாக ஆகிவிட்டன.
சிப்ஸ்
# We are good என்பதற்கும், we are well என்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?
We are good எனும்போது அவர்கள் மகிழ்ச்சியைக் குறிக்கிறார்கள். We are well என்பது அவர்களின் ஆரோக்கியமான உடல் நலத்தைக் குறிக்கிறது.
# Assistance, Assistants என்ன வேறுபாடு? முறையே உதவி, உதவியாளர்கள்.
# Deadwood என்றால்? யாருக்கும் பயனில்லாத.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago