வரலாறு தந்த வார்த்தை 23: ஃபேஸ்புக் தந்த ‘இடி!’

By ந.வினோத் குமார்

‘டே

ட்டாவ திருடிட்டாய்ங்க…!’

இதுதான் கடந்த வாரத்தில் ‘இடி’யாக இறங்கிய செய்தி. ஃபேஸ்புக் மூலம் தரவுகளைத் திருடி, அவற்றை டொனால்ட் டிரம்புக்கான வாக்குகளாக மாற்றி, அவரை அமெரிக்க அதிபராக்கியிருக்கிறது ‘கேம்ப்ரிட்ஜ் அனலடிகா’ எனும் நிறுவனம்.

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது பழைய கதை. இப்போது ‘வல்லவனுக்கு டேட்டாவும் ஆயுதம்’. பெயர், பிறந்தநாள் முதற்கொண்டு நேற்று கையேந்தி பவனில் முட்டை தோசையைச் சாப்பிடும்போது எடுத்துக்கொண்ட செல்ஃபிவரை, ஃபேஸ்புக்கை ஏதோ, தன்னுடைய நாட்குறிப்பு போலக் கையாள்வதுதான் கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா போன்ற நிறுவனங்களுக்குக் கைகொடுக்கிறது.

யாருக்கு வாக்களிப்பது என்பது நம் உரிமை. ஆனால், யாருக்கு நமது வாக்கைச் செலுத்த வேண்டும் என்று நம்மை மூளைச் சலவை செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. இதற்கும் பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்குவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

‘என்னய்யா மார்க்கு... இப்படிப் பண்ணிட்டே?’ என்று கேட்டால், ‘சாரி… ஏதோ தப்பு நடந்துபோச்சு’ என்று ஃபேஸ்புக் சமாளிக்கிறது. உண்மையில், ஃபேஸ்புக்கை கேம்பிரிட்ஜ் அனலட்டிகா பயன்படுத்திக்கொண்டது.

ஃபேஸ்புக் எத்தனையோ நல்ல விஷயங்களுக்கும் பயன்பட்டிருக்கிறது. சும்மா, ஒரு பேச்சுக்கு ‘நல்ல விஷயத்துக்காகத்தான் மார்க் ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக்கைக் கண்டுபிடித்தார் என்றே வைத்துக்கொள்வோம். இவ்வாறு, நல்ல விஷயங்களுக்காக ஒருவர் கண்டுபிடித்த ஒரு கருவியையோ ஐடியாவையோ, தீய விஷயங்களுக்காக அல்லது தன்னுடைய சுயலாபத்துக்காகப் பயன்படுத்துவதைக் குறிப்பிட ஆங்கிலத்தில், ‘ஸ்டீல் சம்ஒன்ஸ் தண்டர்’ (steal someone’s thunder) என்றொரு சொற்றொடர் உண்டு.

‘என்னங்க… ‘இடி’யைப் போய் யாராவது திருடுவாங்களா..?’ என்று கேட்டால், 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் கோல்லி சிப்பர் எழுதிய ‘லைவ்ஸ் ஆஃப் தி பொயெட்ஸ்’ என்ற புத்தகத்தின் பக்கங்களைத் திருப்ப வேண்டும். அதில், மேற்கண்ட சொற்றொடர் எப்படிப் புழக்கத்துக்கு வந்தது என்பதைப் பற்றி விளக்கியுள்ளார்.

சிப்பர் வாழ்ந்த அந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில், ஜான் டென்னிஸ் என்ற நாடக ஆசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மேடைகளில், இடி இடிப்பது போன்ற ஒலியை எழுப்புவதற்குரிய கருவி ஒன்றை அவர் கண்டுபிடித்தார். அந்தக் கருவியை முதன்முதலில் தன்னுடைய நாடகமான ‘ஏப்பியஸ் அண்ட் வர்ஜீனியா’வில் பயன்படுத்தினார். ட்ரூரி லேன் தியேட்டர் எனும் அரங்கத்தில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. ஆனால், நாடகம் படுதோல்வி. கூட்டமே வரவில்லை. எனவே, அந்த நாடகத்துக்குப் பதிலாக ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தை மேடையேற்றினார்கள் அந்த அரங்கத்தின் உரிமையாளர்கள்.

அந்த நாடகத்துக்கு ஜான் டென்னிஸும் வந்திருந்தார். அப்போது, ஜான் கண்டுபிடித்த கருவியை, ‘மேக்பெத்’ நாடகக்காரர்கள் தங்களின் நாடகத்துக்குப் பயன்படுத்திக்கொள்வதை அறிந்தார். இதனால் கோபமடைந்த ஜான், அத்தனை பேர் முன்னிலையில், ‘என்னுடைய இடியைத் திருட (ஸ்டீல் மை தண்டர்) அவர்களை அனுமதிக்க மாட்டேன்’ என்று ஆங்கிலத்தில் கத்தினாராம். அப்படித்தான் மேற்கண்ட சொற்றொடர் புழக்கத்துக்கு வந்தது.

மற்றபடி, டேட்டாவைத் திருடினாங்களோ… தாரை வார்த்தாங்களோ… எப்படி இருந்தாலும் ஃபேஸ்புக்குக்கு ஒரு பெரிய ‘டிஸ்லைக்!’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்