ஆங்கிலம் அறிவோமே 206: அது வேண்டாத மின்னஞ்சல்

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

Fest என்கிறார்களே? அது festival என்பதன் சுருக்கமா?

Puff up என்றாலும் Pucker up என்றாலும் ஒரே அர்த்தமா?

இல்லை. Puff up என்றால் swell up. வீங்குவது. Her finger puffed up due to an infection.

Pucker என்பதன் அர்த்தம் தோல் அல்லது துணியை இறுக்குவது. என்றாலும் நடைமுறையில் pucker up என்பது உதடுகளை இறுக்கி ஒரு வட்ட வடிவில் குவிப்பது.

Synonym என்றால் என்ன?

கிரேக்க மொழியில் same, name ஆகிய அர்த்தங்கள் கொடுக்கும் வார்த்தைகளின் இணைப்புதான் synonym. அதாவது, ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தைகள் என்று பொருள். ஆனால், அப்படியே அர்த்தம் தரத்தக்க வார்த்தைகள் என்று இருப்பது அரிதுதான்.

இலையுதிர் காலத்தை பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் autumn என்பார்கள். அமெரிக்க ஆங்கிலத்தில் fall என்பார்கள். Insane, loony ஆகியவை synonyms. ஆனால், loony என்பது informal ஆனது.

Salt, sodium chloride ஆகியவை synonyms. ஆனால், salt என்பதைத் தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகிறோம். Sodium chloride என்பது வேதியியல் வார்த்தை.

Youth, Youngster ஆகிய இரண்டும் synonyms தான். ஆனால், youngster எனும்போது கொஞ்சம் இனிமையாகப் படுகிறது.

Bulimia என்றால் என்ன?

அதிகமாகச் சாப்பிட்டுவிட்டுப் பின் வாந்தி எடுப்பது! உடல் எடை குறித்த அதீதக் கவலை இது. ஒருவித மனநோய் என்றும் கூறுகிறார்கள். கிரேக்க மொழியில் Boulimia என்றால் அதீதப் பசி என்று பொருள்.

“தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பில் உங்களை வியக்க வைத்தது எது?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

சட்டென நினைவுக்கு வரும் இரண்டு இவை.

அறிதுயில் (Hypnosis)

சவைக்கும் சவ்வு (Chewing gum).

சில தமிழாக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அசலான ஆங்கிலச் சொற்களைக் கண்டுபிடியுங்களேன்.

1. கீச்சகம்

2. காயலை

3. வலையொளி

4. புலனம்

5. படவரி

6. அருகலை

7. ஆலலை

8. வருடி

9. மின்னூக்கி

10. தம் படம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகள் குறிக்கும் ஆங்கில வார்த்தைகள் இதோ:

1.Twitter

2. Skype

3. You tube

4. Whats App

5. Instagram

6. Wi Fi

7. Broadband

8. Scanner

9. Charger

10. Selfie

கேட்டாரே ஒரு கேள்வி! Fest என்பதுதான் அடிப்படை வார்த்தை. அதிலிருந்து உருவானதுதான் festival. Fest என்பது ஜெர்மன் சொல். இதற்குப் பொருள் அனைவரும் இணைதல், கொண்டாடுதல். Film fest, Camp fest போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்களே.

“Back to basics என்பதை அவ்வப்போது படிக்க நேரிடுகிறது. என்ன அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள்?’’

அடிப்படைக் கொள்கைகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என வலியுறுத்தும் இயக்கத்தின் முழக்கம் இது. அமெரிக்காவில் தொடங்கியது. என்றாலும் 1993-ல் பிரிட்டனிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி இதை அப்படியே வாரியணைத்துக்கொண்டது. “Back to basics-க்கான நேரம் வந்துவிட்டது. சுய ஒழுக்கம், சட்டத்தை மதித்தல், குடும்பப் பொறுப்பு போன்றவற்றுக்கெல்லாம் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று பிரகடனப்படுத்தியது.

மேற்கோள் குறிக்குள் (Quotation marks) இடம்பெறும் முதல் எழுத்தை எப்போதும் கேபிடலில் எழுத வேண்டுமா?

எப்போதுமே ஒரு வாக்கியத்தின் தொடக்க எழுத்தைக் கேபிடலில்தான் எழுதுவோம்.

Children are innocent.

அந்த வாக்கியம் மேற்கோள் குறிக்குள் தொடங்கினாலும் இது பொருந்தும். “Children are innocent”.

ஆனால், மேற்கோள் வாக்கியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வரும்போது இரண்டாம் பகுதியின் முதல் எழுத்து கேபிடலில் எழுதப்படுவதில்லை.

“Children”, he said, “are generally innocent”. இங்கே are என்ற வார்த்தை மேற்கோள் குறிக்குள் இடம்பெற்றாலும் அதன் முதல் எழுத்து கேபிடலில் இல்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.

மற்றபடி கவிதைகளை எழுதும்போது ஒவ்வொரு வரியின் தொடக்கமும் கேபிடலாக எழுதுவது வழக்கம்.

‘Spam’ என்றால் எந்தவகை அஞ்சல்?

வேண்டாத மின்னஞ்சல். சிலர் ஒரு தகவலை நூற்றுக்கணக்கானவர்களுக்கு அனுப்பித் தொலைப்பார்கள். பலருக்கும் அது தேவையற்றதாக இருக்கும். இதுபோன்ற அஞ்சல்கள் நம் மெயில்பாக்ஸை அடைத்துக்கொள்கின்றன. படிப்பதால் நேரம் வீணாகிறது.

போட்டியில் கேட்டுவிட்டால்?

My brother always ----- to me when we have an argument.

a) gives up

b) gives in

c) gives off

d) gives out

Gives out என்றால் ஒன்றைப் பலருக்கும் அளிப்பது. The consultant gives up financial advice to the public.

Gives off என்றால் வெப்பம், ஒளி, வாசம் போன்ற எதையோ வெளிப்படுத்துவது. When they die, plants give off gases like carbon dioxide.

Gives up என்றால் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்திவிடுவது. His son persuaded him to give up smoking.

Gives in என்றால் ஒரு விவாதத்திலோ, போட்டியிலோ விட்டுக்கொடுத்துவிடுவது. அதாவது தன் தோல்வியை ஏற்றுக்கொள்வது.

எங்களுக்குள் எப்போதும் கடும் விவாதம் ஏற்பட்டாலும் என் சகோதரன் விட்டுக்கொடுத்துவிடுவான் என்பதுதான் பொருள். அர்த்தத்தைப் பொருத்து gives up, gives in ஆகிய இரண்டுமே பொருந்துகின்றன. என்றாலும் கோடிட்ட இடத்துக்குப் பிறகு ‘to me’ என்ற வார்த்தைகள் இடம்பெறுவதால் gives in என்பதுதான் கச்சிதமாகப் பொருந்துகிறது.

எனவே My brother always gives in to me when we have an argument என்பதுதான் சரியான வாக்கியம்.

சிப்ஸ்

Crumb என்றால் என்ன?

மிக மிகச் சிறிய ரொட்டித் துண்டு. உச்சரிக்கும்போது crum என்பதுபோலதான் உச்சரிக்க வேண்டும்.

Offshoring என்றால் வெளிநாடுகளில் பணிபுரிவது. Onshoring என்று ஒரு வார்த்தை உண்டா?

உண்டு. உள்நாட்டில் வேலைபார்ப்பது.

எலுமிச்சைக்கு மேல் தடிமனாக இருக்கும் தோலை Lemon skin எனலாமா?

Lemon rind. (rind என்பதை find என்ற சொல்லில் உள்ள ‘ind’-ஐ உச்சரிப்பதுபோலவே உச்சரிக்க வேண்டும்).

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்