கேள்வி நேரம் 25: பெருமிதம் தேடித் தந்தவர்கள்

By ஆதி வள்ளியப்பன்

1. விடுதலைப் போராட்ட வீராங்கனைகளில் மிகவும் தீரம் மிகுந்தவராகக் கருதப்பட்டவர் மணிகர்ணிகா டாம்பே. ஆனால், இப்படிச் சொன்னால் யாரென்று தெரியாது. வேறு பெயரில்தான் அவரை நாம் அறிந்திருக்கிறோம். அந்தப் பெயர் என்ன?

2. பஞ்சாபியிலும் இந்தியிலும் எழுதிய கவிஞர், எழுத்தாளர் அவர். பஞ்சாபி மொழியின் முதல் பெண் எழுத்தாளராக அடையாளம் பெற்றவர். எல்லைகளைக் கடந்து இந்தியா, பாகிஸ்தான் வாசகர்களால் ரசிக்கப்படுபவர். 60 ஆண்டுகளுக்கு எழுத்துப் பணியில் இருந்த அவர், நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்ற அவர் பெயர் என்ன?

2CH_BhanuAthaiyaOscarright

3. கேரளத்தைச் சேர்ந்த அன்னா ராஜம் மல்ஹோத்ரா, இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழக ஐ.ஏ.எஸ். பிரிவுக்கு அனுப்பப்பட்ட அவருக்குத் துணை ஆட்சியர் பதவி அளிப்பதற்குப் பதிலாக, தலைமைச் செயலகத்திலேயே பதவியளிக்க அன்றைய தமிழக முதல்வர் முன்வந்தார். அன்னா ராஜம் அதை ஏற்றுக்கொள்ளாததால், அன்றைய திருப்பத்தூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அன்றைய தமிழக முதல்வர் யார்?

4. தமிழகத்தின், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர். அவரது மேயர் பதவிக் காலத்தில்தான் சென்னையில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு மேயர் பதவியைப் பெற்ற அவருடைய பெயர் என்ன?

5. நாடு விடுதலை பெற்ற பின் ஜவாஹர்லால் நேரு தலைமையில் பதவியேற்ற முதல் ஆட்சியில் சுகாதார அமைச்சராகவும், கேபினட் அந்தஸ்து பெற்ற நாட்டின் முதல் பெண் அமைச்சராகவும் அவர் ஆனார். 10 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்த அவர், அதற்கு முன்னதாக அரசியல் சாசனத்தை வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திலும் இடம்பெற்றிருந்தார். அவர் பெயர் என்ன?

6. அன்றைய பம்பாயைச் சேர்ந்த கமலா பாய் கோகலே, அவருடைய தாய் துர்காபாய் காமத் உடன் சேர்ந்து ‘மோகினி பஸ்மாசுர்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் 1914-ல் வெளியானது. கமலா பாய் கோகலே பெற்ற பெருமை என்ன?

2CH_kamala-bai

7. இந்தியத் திரையுலகின் ஆரம்ப கட்டத்தில் 1933-ல் இருந்து 1943 வரை 10 ஆண்டுகளுக்கு இந்திப் படங்களில் நடித்தவர். திரையுலகில் பிரபலமடைந்த முதல் நடிகை. 1969-ல் இந்திய திரைத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் நடைமுறை தொடங்கியது. முதல் விருதையே பெற்ற பெருமைக்குரிய அந்த நடிகை யார்?

8. நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா, இதுவரை 45 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேருக்கு இறந்த பிறகு வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற 45 பேரில் எத்தனை பேர் பெண்கள், அவர்களுடைய பெயர்கள் என்னென்ன?

9. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த அவர் போட்டி சார்ந்த விளையாட்டில் பங்குபெறாதபோதும் மதிப்புமிக்க அர்ஜுன விருதைப் பெற்றவர். 1984 மே 23-ம் தேதி உலகின் உச்சியைத் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற சாகசத்தைப் புரிந்தவர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மானும் ரெசூல் பூக்குட்டியும் 2009-ல் ஆஸ்கர் விருது பெறும்வரை, போட்டிப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விருது பெற்ற ஒரே இந்தியர் ஒரு பெண். ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தின் ஆடை வடிவமைப்புக்காக அந்த விருதைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியப் பெண் யார்?

விடைகள்

1. ஜான்சி ராணி லட்சுமி பாய்.

2. அம்ரிதா பிரீதம்

3. ராஜாஜி

4. தாரா செரியன்

5. ராஜ்குமாரி அம்ரித் கவுர்

6. இந்திய சினிமாவின் முதல் நடிகை

7. தேவிகா ராணி ரோரிச்

8. இந்திரா காந்தி, அன்னை தெரசா, அருணா ஆசப் அலி, எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர்

9. இமய மலை உச்சியைத் தொட்ட பச்சேந்திரி பால்.

10. பானு அத்தையா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்