ஆங்கில​ம் அறிவோமே 264: முதுகுக்குப் பின்னால் பேசுவது!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

"Twelve plus one என்பதும், Eleven plus two என்பதும் ஒன்றே என்பதைக் கவனித்தீர்களா!!!"

இரண்டும் thirteenதானே.  இதற்கு ஏன் மூன்று ஆச்சர்யக் குறிகள்?.. ஓ, புரிந்தது.  Twelve plus one என்பதிலுள்ள எழுத்துக்களை மாற்றிப் போட்டால் eleven plus two என்று வருகிறது.    Anagrams.

"முதுகுக்குப் பின்னால் பேசுவது என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவார்கள்?"

Talking behind the back என்றுதான்! அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி கூறியது நினைவுக்கு வருகிறது.  "I do not care about people who talk behind my back, because it means I am two steps ahead of them".

 “Road என்பதற்கும், Street என்பதற்கும் என்ன வேறுபாடு?  Avenue என்பது colony-ஐக் குறிக்கிறதா?"

வாசகரே, இது road, இது street என்பதுபோல் பொதுவான வரையறை இல்லை.  மரபுப்படி road என்பது இரு பகுதிகளை இணைக்கும் ஒரு சாலை அவ்வளவே.  ஆனால், street என்பது நிச்சயம் ஒரு பொது வழியாக இருக்கும்.  அதன் இருபுறமும் கட்டடங்கள் இருக்கும்.

பொதுவாக road என்பது​ street-ஐவிட அதிக அகலமாக இருக்க வாய்ப்பு உண்டு. Lane என்பது குறுகிய சாலை.  Avenue என்பதை நிழற்சாலை எனலாம். அதாவது இருபுறமும் மரங்கள் அமைந்த சாலை அல்லது தெரு.

“என் வீட்டில் டால்மேஷன் நாய் வளர்க்கி​றேன்" என்றார் ஒரு நண்பர்.  அதற்கு மற்றவர் “ஓ, ​Small Dog ஆ? நான் வீட்டில் அல்சேஷன் வளர்க்கிறேன், 

big dog’’ என்றார். 

நாய் ஓகே. இதுவே Cat என்பதாக இருந்தால் அர்த்தம் மாறிவிடும்.  Big Cat என்றால் பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றைக் குறிக்கும். 

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்