சேதி தெரியுமா? - வெளியானது கருந்துளையின் முதல் படம்

By கனி

ஏப்ரல் 10: தொலைதூர விண்மீன் மண்டலத்தில் அமைந்திருக்கும் கருந்துளையின் முதல் படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தக் கருந்துளை எட்டுத் தொலைநோக்கிகள் இணைக்கப்பட்ட ‘இவென்ட் ஹாரிஸான்’ தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. எம்87 என்ற விண்மீன் மண்டலத்தில் இந்தக் கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.

நம் ஒட்டுமொத்தச் சூரியக் குடும்பத்தின் அளவைவிட இந்தக் கருந்துளையின் அளவு மிகப் பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேட்டி பவுமன் என்ற அமெரிக்க ‘எம்.ஐ.டி.’ பல்கலைக்கழக மாணவி உருவாக்கிய அல்காரிதம்தான் இந்தக் கருந்துளைக் கண்டுபிடிப்பைச் சாத்தியப்படுத்தியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம்: விசாரணை நடைபெறும்

ஏப்ரல் 10: ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ஆவணங்கள் அடிப்படையில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை நகல் எடுத்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், அந்த ஊடகத்தில் வெளியான ஆவணங்களை தேசியப் பாதுகாப்பைக் கருதி ஆதாரங்களாக ஏற்கக் கூடாது என்றும் வாதிட்டார். மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தின் மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.

இந்திய மக்கள்தொகை: 136 கோடி

ஏப்ரல் 10: இந்திய மக்கள்தொகை, 2010 முதல் 2019 வரையான காலத்தில், 1.2 சதவீத ஆண்டு விகிதத்தில் வளர்ச்சி அடைந்து 136 கோடியாகி இருப்பதாக ஐ.நா.வின் 2019 மக்கள்தொகை அறிக்கை தெரிவிக்கிறது. 1994-ல் 94.22 கோடியாகவும் 1969-ல் 54.15 கோடியாகவும் இருந்த இந்திய மக்கள்தொகை, 2019-ல் 136 கோடியாகியிருக்கிறது.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட தேசமான சீனாவின் மக்கள்தொகை, 2019-ல் 142 கோடியாக இருக்கிறது. 2010 முதல் 2019 வரை, சீனாவில் 0.5 சதவீத ஆண்டு விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது ஐ.நா.

முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

ஏப்ரல் 11: 543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. ஆந்திரம், தெலங்கானா, உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, ஒடிஷா, சிக்கிம், அந்தமான்-நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மக்கள் வாக்களித்தனர்.

இதில், ஆந்திரம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதிகபட்சமாக திரிபுராவில் 81.8 சதவீதமும் மேற்கு வங்கத்தில் 81 சதவீத வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்