கேட்டாரே ஒரு கேள்வி
“சமரசம் உலாவும் இடம்’’ என்பதால்தான் ‘சிமெட்ரி’ என்று அதற்குப் பெயரிட்டார்களா?
போட்டிகளைக் காணோமே என்று போர்க்கோலம் பூண்ட வாசகர்களே, இதோ உங்களுக்கான போட்டி.
கீழே 10 ஆங்கிலத் திரைப்படப் பெயர்களின் பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் குறிக்கும் விடை எது? கொடுக்கப்பட்டுள்ள 19 விடைகளிலிருந்து நீங்கள் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (விடைகளைத் தேர்வு செய்ய அந்த ஆங்கிலத் திரைப்படங்கள் குறித்த எந்தத் தகவலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை).
1. Avatar
2. Batman
3. Unbreakable
4. Jaws
5. The Silence of Lambs
6. Iron Man
7. Braveheart
8. Atonement
9. The Bucket list
10. The English Patient
உங்கள் விடைகளை விரைவில் மின்னஞ்சலில் கீழ்க்கண்ட முறையில் அனுப்புங்கள்.
1. Avatar – C
உங்கள் பெயர், ஊர், என்ன செய்கிறீர்கள் (மாணவர், மருத்துவர், வணிகம், ஐ.டி.பணி, இல்லத்தரசி, இல்லத்தரசன் என்பதுபோல்) என்பனவற்றை மறக்காமல் எழுதுங்கள்.
A. உடையக்கூடிய
B. பந்து வீச்சாளரோ ஃபீல்டரோ அல்ல
C. ராமர் அல்லது கிருஷ்ணர்
D. கண்ணாடி அல்ல
E. இறப்பதற்குள் செய்ய விரும்பும் செயல்கள்
F. பயங்கர சுறா
G. முகத்தின் பகுதி
H. செம்மறி ஆடுகளின் மெளனம்
I. இஸ்திரி போடுபவர்
J. ஒரு விலங்கின் பெயரில் தொடங்கும் மனிதன்
K. விளக்குகளின் மெளனம்
L. உறுதியானவர்
M. நீண்ட ஆயுள் கொண்டது
N. வாளிக்குள் பட்டியல்
O. கோழைக்கு இருக்காது
P. ஆங்கிலேய நோயாளி
Q. பாவமன்னிப்பு
R. பரிகாரம்
S. ஆங்கிலம் பேசும் நோயாளி
கேட்டாரே ஒரு கேள்வி நண்பரே, உங்கள் அங்கதம் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. என்றாலும் ஆங்கிலக் கோணத்தில் சில விளக்கங்கள்.
புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை cemetery என்பார்கள். இதை ஸெமெட்ரி என்று உச்சரிப்பார்கள் (அமெரிக்கர்கள் ஸெமெடெரி என்பார்கள்).
Symmetry என்பதற்கு சமச்சீர்மை அல்லது ஒத்தத் தன்மை என்பது பொருள். அதாவது ஒரு சதுரத்தை சரி பாதியாகப் பிரித்தால், அவை இரண்டுமே symmetry-யோடு காணப்படும். இந்த வார்த்தையை ஸிமெட்ரி என்று உச்சரிக்க வேண்டும் (நீங்கள் அமெரிக்கராக இருந்தாலும்!).
“Outgoings” என்று ஒரு வார்த்தை உண்டா? அது outgoing என்பதன் பன்மையா?’’ எனக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
Noun-க்குதான் ஒருமையும் பன்மையும். Outgoing என்றால் வெளியேறுகிற என்று பொருள். Outgoings என்றால் செலவு. What are your monthly outgoings on food?
“Calf என்பது கன்றுக்குட்டியை மட்டும்தான் குறிக்குமா?”
யானை, திமிங்கலம், காண்டாமிருகம் இவற்றின் குட்டியைக்கூட calf என்பதுண்டு. என்றாலும் ஒரு வயதுக்கு உட்பட்ட பசு அல்லது காளையின் கன்றைத்தான் பொதுவாக calf என்கிறோம்.
கீழ்க்காலின் பின் பகுதியிலுள்ள ஆடுகால் சதை அல்லது கெண்டைக் காலைக்கூட calf என்பதுண்டு (மற்றபடி இருமலைக் குறிப்பது cough என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்).
“Soap தெரிகிறது. Sop என்றால் என்ன?”
வாசகரே, அதுவும் ஒருவகை ‘சோப்புதான்’. கோபத்திலோ வருத்தத்திலோ இருக்கும் ஒருவரை சமாதானப்படுத்துவதற்காகவோ, ஒருவர் தொந்தரவு கொடுப்பார் என்பது தெரிந்தால் அவரை வழிக்குக் கொண்டு வருவதற்காகவோ அளிக்கப்படும் ஒன்று. பொதுவாக sop என்பது அதிக மதிப்புள்ளதாக இருக்காது.
சூப் போன்ற திரவத்தில் ஊறவைத்த ரொட்டித் துண்டையும் sop என்பார்கள்.
நிறுவனங்களைப் பொறுத்தவரை SOP என்பது Standard Operating Procedure என்பதைக் குறிக்கிறது.
தொடக்கம் இப்படித்தான்
மஃப்டி உடை என்றால் சீருடை அல்லாத என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். போலீஸ்காரர் மஃப்டியில் வந்திருக்கிறார் என்றால், காக்கி உடை அணியாமல் சாதாரண உடையில் வந்திருக்கிறார் என்று பொருள்.
மஃப்டி என்பது ஓர் அரபி வார்த்தை. இதற்குப் பொருள் ‘அதிகாரி’. குறிப்பாகச் சொல்வதென்றால் குரானையும் முஸ்லிம் சட்டத்தையும் விவரித்துக் கூறும் அதிகாரி. இவர் தொங்கும் கவுன் போன்ற உடையையும் தலைக்கு மேல் வட்ட வடிவில் அமைந்த குல்லாயையும் அணிந்திருப்பார். தவிர இவருக்கு எந்தவித உடையும் அணிய சுதந்திரம் உண்டு. எனவே (ராணுவம்போல) குறிப்பிட்ட சீருடை என்று அல்லாத உடைகளை mufti என்று குறிப்பிடத் தொடங்கி அது நிலைத்து விட்டது.
சிப்ஸ்
# Feign என்றால் மயங்குவதுதானே?
அது faint. Feign என்றால் பாசாங்கு செய்தல் - Pretend.
# Vest என்றால் உள்ளாடையா?
பனியன். சில சமயம் கையில்லாத (சட்டைக்கு மேல் அணியும்) ஜாக்கெட்டையும் குறிப்பிடுகிறார்கள்.
# Invaluable என்றால்?
Valuable.
தொடர்புக்கு: aruncharanya@gmail.comCalf
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago