கேட்டாரே ஒரு கேள்வி
“எது சரியான சொல்? Insecured என்பதா, Unsecured என்பதா?”
Insecure, unsecure ஆகிய இரண்டு சொற்களுமே வழக்கத்தில் உள்ளன. இரண்டுமே adjectives ஆக (அதாவது ஒரு noun-ஐ விளக்கும் விதத்தில்) பயன்படுத்தப்படுகின்றன.
Unsecure என்பது secure என்பதன் எதிர்ச்சொல். அதாவது ஒரு தாக்குதல் வரும்போது அதற்கான பாதுகாப்பு இல்லாத தன்மையைக் குறிக்கிறது எனலாம். It is surprising that very important files were stored on his unsecured home computer. Unsecured loans என்றால் ஈடாக எந்தவித அடமானமும் வைக்கப்படாத கடன்கள் என்று பொருள்.
Insecure என்பதற்கு எதிர்ச்சொல்லாக confident என்பதைக் கூறலாம். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் insecure ஆக உணர்கிறார் என்றால், அங்கே பாதுகாப்பற்ற தன்மையோடு இருக்கிறார் என்று பொருள்.
இப்படிப் பயன்பாட்டில் இருவிதமாக இந்த இரு சொற்களும் மாறுபட்டாலும், அடிப்படையில் இவை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைத்தான் உணர்த்துகின்றன.
*******************
சிலர் தங்களை “Myself Mr.Ganesh” என்பதுபோல அறிமுகம் செய்து கொள்வதைப் பார்க்கிறேன்.
நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்ளும்போது Mr, Mrs, என்பதெல்லாம் வேண்டாமே.
தவிர ‘myself’ என்றால் ‘நானே’ என்று பொருள். அதாவது I can do it myself என்பதுபோல். எனவே, சுய அறிமுகத்தின்போது ‘I am Ganesh’ என்பதுபோல் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
*******************
Drought என்றாலும், famine என்றாலும் ஒன்றைத்தான் குறிக்கிறதா?
Famine என்றால் பஞ்சம். Drought என்றால் வறட்சி.
இரண்டின் காரணமாகவும் போதிய விளைச்சலோ குடிநீரோ மக்களுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு. இரண்டின் காரணமாகவும் பொருளாதாரச் சீர்கேடு நிகழும்.
என்றாலும், drought என்பது ஒரு பகுதியில் நீண்டகாலத்துக்கு நிலவும் வறட்சியைக் குறிக்கிறது. Famine என்பது உணவுப் பஞ்சத்தைக் குறிக்கிறது. Drought காரணமாக famine ஏற்படலாம்.
english-2jpg100
Innumerable என்றாலும், inordinate என்றாலும் ஒரே பொருள்தானா என்கிறார் ஒரு வாசகர்.
மிக அதிக அளவில் (too much) என்கிற பொருள்தரும் சொற்கள் இவை.
என்றாலும் எண்களால் எண்ணக்கூடியவற்றை innumerable என்ற சொல்லைப் பயன்படுத்துவோம். Innumerable hours of overtime. Inordinate number of students என்றும் வருவதுண்டு. ஆனால், எண்ண முடியாதவற்றுக்கும் inordinate என்பதைப் பயன் படுத்துவதுண்டு inordinate delay என்பதுபோல.
அதாவது innumerable என்றால் too many, inordinate என்றால் too much அல்லது too many.
சிப்ஸ்
#சோழி என்பது ஆங்கிலத்தில்?
Cowry அல்லது cowrie.
# Habit? Habitat?
Habit என்றால் பழக்கம். Habitat என்றால் ஓர் உயிரினத்தின் இயல்பான வீடு அல்லது குடியிருப்பு. பெரும்பாலும் ஒரு உயிரினமோ தாவரமோ காணப்படும் அதன் இயல்பான சுற்றுப்புறம்.
#“You are kidding, right?” என்றால்?
“என்ன கிண்டலா?’’
தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago