அமர் எனும் கடுகு!

By யுகன்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதைக் கடுகே சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது, தெலங்கானாவின் மஞ்சேரியல் என்ற ஊரிலிருக்கும் அமர் சாத்விக் தொகிடி என்ற 13 வயது சிறுவனின் பேச்சு.

“நம் நாட்டில் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அவற்றைக் கடைப்பிடிப்பதிலும் செயல்படுத்துவதிலும்தான் பின்தங்கிவிடுகிறோம். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகும்போது விரைவாக ஒவ்வொரு நடைமுறைகளையும் விதிமுறைகளையும் செயல்படுத்துவேன்!”

இதுதான் அந்த அக்கினிக் குஞ்சிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் பொறி பறக்கும் பேச்சு.

ஈர்க்கும் உத்திகள்

இந்தியக் குடியுரிமைத் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் புவியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை எளிமையாகப் புரியும் வகையில் ‘லேர்ன் வித் அமர்’என்னும் தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாகப் பதிவிடுகிறார் அமர். உலகில் பரந்துபட்டு உயர்ந்திருக்கும் மலைத் தொடர்கள், கடல், ஆறு ஆகியவற்றின் சிறப்புகளை ஆங்கிலத்தில் ஒரு குட்டி ஆசிரியனாக அமர் விளக்குவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஆசிய கண்டத்திலிருக்கும் நாடுகளின் பெயர்களை வரைபடத்தில் புதிய உத்தியுடன் குறிப்பிடும் முறை சிறியவர்களை மட்டுமில்லாமல் பெரியவர்களையும் ஈர்க்கிறது. அமருக்கு 10 வயதிருக்கும்போது, 2016-ல் அவர் தொடங்கிய யூடியூப் சேனலை இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பின் தொடர்கிறார்கள். இதில் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகுபவர்களும் பயன் பெறுகிறார்கள் என்பதில்தான் அமர் என்னும் குட்டி ஆசிரியரின் பெருமை ஒளிந்திருக்கிறது. புவியியலைத் தவிர அமருக்குக் கணிதமும் இயற்பியலும் விருப்பப் பாடங்களாம்.

முன்மாதிரி பெற்றோர்

அமர் சாத்விக்குக்கு ஒரு தம்பியும் இருக்கிறான். அமரின் தந்தை ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியையும் செய்து வருபவர். “அமர் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, எப்போதும் உலக வரைபடத்தை வைத்துக்கொண்டுதான் விளையாடிக்கொண்டிருப்பான். அதில் அவனுக்கு இருக்கும் ஈடுபாட்டைப் பார்த்த நான் அவனுக்குப் புவியியலைப் பற்றி அதிகம் சொல்ல ஆரம்பித்தேன். நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு நாள் அவனே எனக்குப் புவியியல் பாடங்களை விளக்க ஆரம்பித்தான். அவன் பேசியதை எதேச்சையாக வீடியோவாகப் பதிவுசெய்த என்னுடைய மனைவி, அதை இணையத்தில் பதிவிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே. நாளடைவில் நிறைய வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்தோம்”என்கிறார் அமருடைய தந்தை.

தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அமரின் வழியில் அவரின் தம்பியும் இறங்கி இருக்கிறார். தங்களிடம் கேட்கப்படும் சந்தேகங்களை விளக்குவதற்கு இரண்டு வாரங்களில் அது தொடர்பான பாடங்களைப் படித்துவிட்டு, அதற்கான பதில்களையும் வீடியோவாகப் போடுகிறார் அமர்.

“உரிய நேரத்தில் பதில்களைப் போடாமல் போனால், பல விமர்சனங்களும் இவருக்கு வருமாம். என்ன செய்வது அவர்களின் கேள்விக்கு உடனடியாக என்னால் பதில் போட முடிவதில்லை. என்னுடைய பாடங்களை வார நாட்களில் படிக்கிறேன். வார இறுதி நாட்களில்தான் பிறரின் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்வதற்காக உயர் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடிகிறது!”என்கிறார் மழலை மாறாத குரலில் அமர்.

அவனுக்கு வேண்டியதைப் படிப்பதுடன் அடுத்தவருக்கு வேண்டியதையும் சேர்த்துப் படித்து இத்தனை சிறிய வயதில் கல்வி தானம் அளிக்கும் அமர் சாத்விக்கை வாழ்த்தி, நாமும் பின்தொடர்வோம்.

 

 

அமர் யூடியூபில் பதிவேற்றியிருக்கும் இன்னும் சில வீடியோக்கள்

 

Mountains of the world - https://bit.ly/2SAZKMa

 

Rivers in the world - https://bit.ly/2BCJX4T

 

Biosphere reserves of India - https://bit.ly/2WXlEI1

 

My channel - https://bit.ly/2DBBnDM

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்