காந்தி 150: எழுத்தாளர் காந்தி

By சி.கோபாலகிருஷ்ணன்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலம் 78 ஆண்டுகளும் சில மாதங்களும். ஆனால், அவர் அளவுக்கு எழுதிக் குவித்த தலைவர்கள் உலகில் மிகச் சிலரே இருப்பார்கள். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளும் அவரது உரைகளும் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன. சில தனி நூல்களையும் அவரே எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமான நூல்களின் தொகுப்பு:

> The Story of My Experiments with Truth - தாய்மொழியான குஜராத்தியில் காந்தி எழுதிய சுயசரிதை நூல். மகாதேவ் தேசாய் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சத்திய சோதனை’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

> Hind Swaraj or The Indian Home-Rule – இங்கிலாந்திலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு 1909-ல் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தபோது குஜராத்தியில் காந்தி எழுதிய நூல். இந்த நூல் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிறகு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் இருந்து காந்தியே இதை ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

> India of My Dreams – தான் கனவு கண்ட சுதந்திர இந்தியாவைப் பற்றிய காந்தியின் உரைகள், கட்டுரைகளின் தொகுப்பு. தொகுத்தவர்: ஆர்.கே.பிரபு

> Village Swaraj – கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசியல், பொருளாதார அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் கிராம சுயராஜ்யத்தைக் கட்டமைக்க வலியுறுத்தியவர் காந்தி. அது தொடர்பான அவருடைய உரைகள், கட்டுரைகளின் தொகுப்பு இது. தொகுத்தவர் – ஹெச்.எம்.வியாஸ்

> Key to Health – மருத்துவரையும் மருந்துகளையும் சாராமல் உடல்நலனைப் பேணுவது பற்றிய தன் கருத்துகளை குஜராத்தியில் இந்த நூல் வழியே அளித்துள்ளார் காந்தி. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- சுசீலா நாயர்

> Satyagraha in South Africa – இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கும் முன் தென் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய ஆட்சியாளர்களால் ஒடுக்குதலுக்கு உள்ளான தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களுக்காக காந்தி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார். அதைப் பற்றி அவர் எழுதிய நூல் இது. குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – வல்ஜி கோவிந்த்ஜி தேசாய்;

> All men are Brothers- காந்தி தன் வாழ்க்கை பற்றியும் சிந்தனைகளைப் பற்றியும் பேசியவற்றின் தொகுப்பு. தொகுத்தவர் – கிருஷ்ணா கிருபளாணி;

> Epigrams from Gandhi – உண்மை, அகிம்சை, கடவுள், மதம், கடவுள் மறுப்பு, பிரம்மச்சரியம், சத்யாகிரகம், காந்தியம், கல்வி என ஆயிரக்கணக்கான விஷயங்களைப் பற்றிய காந்தியின் மேற்கோள்களின்

தொகுப்பு நூல்

> Ethical Religion – அனைத்து மதங்களும் அறநெறியையே போதிக்கின்றன என்பதை விளக்கும் நூல்.

> My God – கடவுள் பற்றிய தன் கருத்துகளை இந்த நூலில் காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.

> My Religion – மதம் பற்றிய காந்தியின் உரைகள், கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தொகுத்தவர்- பரதன் குமரப்பா

> The Way to Communal Harmony – மதம் மட்டுமல்லாமல் மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் பற்றிய காந்தியின் கருத்துக்கள், எழுத்துகளின் தொகுப்பு. தொகுத்தவர் – யு.ஆர்.ராவ்

(காந்தியின் மொத்த எழுத்துக்கான காப்புரிமையை நவஜீவன் டிரஸ்ட் பெற்றுள்ளது. அதனிடம் அனுமதி பெற்று ‘All Men Are Brothers' நூலை யுனெஸ்கோ வெளியிட்டது. இந்திய வாசகர்களுக்காக இதன் மலிவு விலைப் பதிப்பை நவஜீவன் டிரஸ்ட் வெளியிட்டது.)

காந்தி நடத்திய இதழ்கள்

# Indian Opinion – காந்தியின் முதல் இதழ். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது 1903-ல் இந்த நாளிதழை அவர் தொடங்கினார். ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, தமிழ் மொழிகளில் இது வெளியானது.

# Navajivan – 1919-ல் காந்தியால் தொடங்கப்பட்ட குஜராத்தி மாத இதழ்

# Young India – 1919-ல் காந்தி தொடங்கிய ஆங்கில வார இதழ்.

# Harijan, Harijan Bandhu, Harijan Sevak - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கக் களமிறங்கியபின் காந்தி தொடங்கிய இதழ். ஆங்கிலத்தில் ‘ஹரிஜன்’, குஜராத்தியில் ‘ஹரிஜன் பந்து’, இந்தியில் ‘ஹரிஜன் சேவக்’ என்ற பெயர்களில் இந்த வார இதழ் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்