அந்த நாள் 20: பாதுகாக்கப்பட்ட பாடலிபுத்திரம்

By ஆதி வள்ளியப்பன்

காலம்: பொ.ஆ.மு. 270-230, பாடலிபுத்திரம்

“அசோகரின் சிறப்புகளுக்கு முடிவேயில்லை. ஆனா, அவர் ஆண்ட பகுதிகளைப் பத்தி நீ அதிகமா சொல்லலையே குழலி.”

“அந்தக் காலத்துல உஜ்ஜைன், தட்சசீலம், கண்ணூஜ், காசி, துறைமுக நகரங்களான தாம்ரலிபிதி, பாருகச்சா போன்றவை பிரபலமா இருந்தன. அதேநேரம் தலைநகரா இருந்த பாடலிபுத்திரம் தனிச்சிறப்பைப் பெற்றிருந்துச்சு. இன்னைக்கு அங்கதான் உன்னைக் கூட்டிட்டுப் போகப் போறேன்."

“அப்ப புறப்படுவோம்”

“பள்ளி வரலாற்றுப் புத்தகங்கள்ல மெகஸ்தனிஸ் என்ற பெயரைப் படிச்சிருப்ப. கிரேக்க அரசர் செல்யூகஸ் நிகேடரின் தூதுவரா மெகஸ்தனிஸ் பாடலிபுத்திரத்துக்கு வந்தார். இந்தியாவில் பல ஆண்டுகளுக்குத் தங்கியிருந்த அவர், மகத ஆட்சிப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘இண்டிகா’ என்ற விரிவான புத்தகத்தையும் எழுதியிருக்கார்.

மெகஸ்தனிஸ் போன பாடலிபுத்திரத்துக்கு இப்போ நாம போவோம். நம்ம ஊரு மதுரையப் போலவே பாடலிபுத்திரமும் ‘உறங்கா நகரம்’னு அழைக்கப்பட்டுச்சு. பெரிய பெரிய மரங்களால உருவாக்கப்பட்ட சுவரால், அந்த நகரம் பாதுகாக்கப்பட்டுச்சு. இந்தச் சுவருக்கு வெளியே மிகப் பெரிய அகழி இருந்திருக்கு. இந்த அகழியைக் கடக்க உதவும் பாலங்கள் இரவில் மடக்கப்பட்டு, ஊரின் கதவுகளை அடைச்சிடுவாங்க. இதனால வெளியாட்கள் யாரும் ஊருக்குள்ள ராத்திரில போக முடியாது. அரசவை உளவாளிங்க மட்டும் ரகசியச் சுரங்கங்கள் வழியா போய் அரசரைச் சந்திச்சு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்துக்கிட்டிருக்காங்க.”

“ஊரை ரொம்ப பத்திரமா பாதுகாத்திருக்காங்க, இல்லையா”

“அதோ தெரியுதே அரண்மனைகளும் அரசவை அதிகாரிகளோட குடியிருப்புகளும், இதுதான் நகரத்தோட மையம். இந்தப் பகுதியிலதான் அன்றைய செல்வந்தர்களும் வாழ்ந்திருக்காங்க. மூன்று மாடி வீடுகூட இருக்கு பாரேன். இவங்களுக்கு நிறைய வசதிகள் கிடைச்சது. ஆறு, ஓடைல இருந்து வாய்க்கால் வழியாக இவங்களோட வீட்டுக்கே தண்ணீர் எடுத்து வரப்பட்டுச்சு.

andha-2jpgஅசோகரின் அரண்மனைச் சிதிலங்கள் இடையே ஃபாஹியான்

அது மட்டுமில்ல. அவங்களுக்குக் கிடைச்ச இன்னும் சில சிறப்பு வசதிகளைப் பத்தி கவி காளிதாசர் பாட்டே பாடியிருக்கார். இன்னைக்குப் பூங்கா, தோட்டங்கள்ல நீர் தெளிக்கும் இயந்திரங்கள் இருக்கிறதைப் பார்த்திருப்ப. அதுபோல வீட்டு முற்றங்களைத் தண்ணீர் தெளித்துக் குளிர்விக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுச்சுன்னு அவர் குறிப்பிட்டிருக்கார். அதேபோல வசதியானவங்க வீடுகள்ல தோட்டமும் இருந்திருக்கு. தோட்டத்துல இருந்த பெருமரங்கள்ல ஊஞ்சல் கட்டி ஆடுறதும் அந்த ஊஞ்சல்கள்ல காதலர்கள் நேரத்தைச் செலவிடுறதையும் பத்தி நிறைய காதல் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கு.”

“காளிதாசர் பாடல்களைப் போலவே பாடலிபுத்திரமும் நிறைய சிறப்புகளோட திகழ்ந்திருக்கு. ஆனா, இன்னைக்கு அந்த ஊர் அப்படியொன்னும் மேம்பட்ட நிலையில் இல்லையே குழலி”

“ஆமா, செழியன். இன்றைய பாட்னா அந்தக் காலத்தைப் போல இல்லேங்கிறது என்னவோ உண்மைதான். பாடலிபுத்திரத்துக்கு அடுத்து பிரபலமா இருந்த நகரம் காசி. இன்றைக்கு வாராணசி என்றழைக்கப்படும் காசி, அன்னைக்கு நெசவுக்குப் புகழ்பெற்றதா இருந்துச்சு. அங்கு நெய்யப்பட்ட மென்னிழையைப் போன்ற பருத்தித் துணிகள் பெயர் பெற்றிருந்தன. புத்தர் அணிந்த மேலுடைகூட காசியில நெஞ்சதுதான். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அப்பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் பருத்தி, பட்டு, தங்க இழைகளால் இன்னைக்கும் மந்திர ஜாலம் செய்றாங்க.”

“பக்திமான்கள் எல்லாம் புனித யாத்திரை போவாங்களே, அந்தக் காசியைப் பத்தித்தானே சொல்ற”

“ஆமா, அன்னைக்கு மௌரிய-மகதத் தலைநகரான பாடலிபுத்திரம், காசி மாதிரியான நகரங்கள் கங்கைக் கரையில் இருந்தன. அந்த ஊர்களின் செல்வச் செழிப்புக்கு முக்கியக் காரணம் கங்கைதான். சந்தைகளுக்குத் தேவையான வியாபாரப் பொருட்கள் எல்லாமே இந்த ஆற்றுல நீர்ப் போக்குவரத்து வழியா கொண்டுபோனாங்க. கங்கை சீரழியாமலும் பாதுகாப்பாகவும் அன்னைக்குப் பராமரிக்கப்பட்டுச்சு, செழியன்.”

“ஆனா இன்னைக்குத் தனி அமைச்சகம் இருந்தும்கூட, கங்கையைக் காப்பாத்த முடியலையே குழலி”.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்