ஆங்கிலம் அறிவோமே 233: நேர்மறையான சகிப்பின்மை

கேட்டாரே ஒரு கேள்வி

“ஒரு தொலைக்காட்சி சேனலில் Goats love grass என்ற விளம்பர வாசகத்தைப் பார்த்தேன். ஆனால், அது எந்தப் பொருளுக்கான விளம்பரம் என்பதையோ, அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ அதில் காட்டவே இல்லை. இந்த மர்மத்தை நீங்கள் உடைக்க முடியுமா?”

**********************

“Crazy என்பதன் அர்த்தம் விளங்கவில்லை. விளக்குங்களேன்’’.

Crazy என்றால் பைத்தியக்காரத்தனமான. They went crazy on seeing her. மிக அதிகமான கோபத்தையும் இப்படி விவரிப்பார்கள்.

The terms and conditions in my Insurance Policy are driving me crazy.

பரவசமடைவதையும் crazy என்பதுண்டு. I love cricket; and I am crazy about Virat Kohli.

**********************

“Delhi என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும்?”

சில ஊர்ப் பெயர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட விதத்தில் உச்சரிக்க முடியும். அவை அனைத்துமே ஒவ்வொருவரின் பார்வையில் சரியானவையாகவும் இருக்கக் கூடும்.

தமிழில் டெல்லி என்கிறோம், டில்லி என்கிறோம். வட இந்தியாவில் சில பகுதிகளில் தில்லி என்கிறார்கள். எப்படி இருந்தாலும் Delhi என்பதில் ‘h’ என்பது மெளன எழுத்துதான். அதாவது ‘silent letter’. பிரிட்டிஷ் ஆங்கிலப்படி Delhi என்பதை ‘டெலி’ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.

**********************

கேட்டாரே ஒரு கேள்வி வாசகரே, நீங்கள் பார்த்தது ஏதாவது ஒரு sports channel ஆக இருக்க வாய்ப்பு அதிகம். நான்கு கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களில் விம்பிள்டனில் மட்டுமே இயற்கைப் புல்வெளியில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே grass என்று குறிப்பிடப்பட்டது விம்பிள்டனைத்தான்.

தவிர இங்கு GOATS என்பது acronym. Greatest Of All Times என்பதன் சுருக்கம்தான் இது.

ஆக அது விம்பிள்டன் போட்டிக்கான விளம்பர வாசகம் எனும் பின்னணியில் பார்க்கும்போது அதன் பொருள் இப்போது உங்களுக்கு விளங்கிஇருக்கும்.

**********************

“அடி நெஞ்சிலிருந்து ஒருவருக்கு நன்றி கூற வேண்டுமென்றால் எப்படி அதை வெளிப்படுத்தலாம்? Thank you from the base of my heart எனலாமா?”

வாசகரே, 'From the bottom of my heart’ என்பதே வழக்கம்.

**********************

Zero tolerance என்பது சகிப்பின்மையைக் குறிக்கிறதா?

சகிப்பின்மை என்பது எதிர்மறையான சொல். ஆனால், zero tolerance என்பது நேர்மறையான விஷயம். சட்டத்தை மீறுவதையோ, சமூகத்துக்கு எதிரான செயல்களையோ, சிறிதும் ஏற்றுக்கொள்ளாத நிலைதான் zero tolerance. 'Zero tolerance of corruption' என்றால் லஞ்சம் ஓரளவு இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

**********************

Acronym, abbreviation ஆகிய வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இது தொடர்பாகக் கூடுதல் தகவல் ஒன்றை வாசகர் ஒருவர் அளித்திருக்கிறார். (நன்றி). அது இதுதான்.

பொதுவாக வார்த்தைகளின் முதல் எழுத்துகளைக் கொண்டுதான் acronym உருவாக்கப்படுகிறது. RAM (Random Access Memory, LASER (Light Amplification by Stimulated Emission of Radiation).

Initialisms என்ற ஒன்றும் இப்போது கூறப்படுகிறது. இதுவும் ஒருவகையில் acronym. என்றாலும் அப்படிச் சுருக்கப்பட்டதை மொத்தமாக ஒரு வார்த்தையாகக் கூறாமல் தனித்தனி எழுத்துகளாகத்தான் உச்சரிக்கப்படுகிறது. LASER என்பதைச் லேசர் என்கிறோம். NASA என்பதை நாஸா என்கிறோம். ஆனால், DVD என்பதை டி.வி.டி. என்கிறோம். CIA என்பதை சி.ஐ.ஏ. என்றுதான் கூறுகிறோம். இது போன்றவற்றை initialism என்கிறார்கள். FBI என்பது இன்னொரு எடுத்துக்காட்டு.

englishjpg100 

More than meets the eye என்றால் என்ன?

குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள். மாலை நேரமாகிவிட்டது. லேசாக இருட்டத் தொடங்கிவிட்டது. எதிரே இரண்டு பாதைகள்.

ஓட்டுனர் இப்படிக் கூறகிறார், “வலதுபக்கப் பாதையில் போனால் ஊரை அடைய எட்டு மணி நேரம் ஆகும். இடதுபக்கப் பாதையில் போனால் ஐந்து மணி நேரத்தில் ஊரை அடைந்து விடலாம்’’

இப்படி அவர் கூறும்போதே “இதில் என்ன தயக்கம்? இடது பக்கப் பாதையிலேயே சென்று விடுங்கள்’’ என்று நீங்கள் கூறிவிடலாம்.

பிறகுதான் அந்தச் சாலை குறித்த முழு விவரமும் உங்களுக்குத் தெரிகிறது.

“இடது பக்கப்பாதை சுருக்குவழிதான். ஆனால், அதில் செல்லும்போது வழியில் ஒரு காடு வரும். அங்கே அடிப்படை வசதிகள் கம்மி’’ என்கிறார் ஓட்டுநர்.

முதலில் அவர் கூறுகையில் மிக எளிதாகத் தென்பட்ட ஒரு விஷயம் இப்போது அவ்வளவு எளிதான ஒன்றாகப் புலப்படவில்லை. இதைத்தான் More than meets the eye என்கிறார்கள். If there is more than meets the eye to something, it is difficult than it appears.

**********************

தொடக்கம் இப்படித்தான்

நாடோடிகளை Gypsy என்று அழைப்பதற்கு ஒரு பின்னணி உண்டு. இங்கிலாந்துக்குள் ருமேனியாவைச் சேர்ந்த மக்கள் நுழைந்தபோது அவர்களின் சற்றே கறுத்த சருமம், கறுப்பு ரோமத்தின் காரணமாக அவர்களை எகிப்திலிருந்து வந்தவர்கள் என்று ஆங்காங்கே தவறாக நினைத்துக் கொண்டுவிட்டனர். Egyptians

என்பது காலப்போக்கில் Gypcian என்று ஆனது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அது Gypsies என்று சுருங்கிவிட்டது. Gypsy-க்களின் முக்கியப் பணி டிங்கரிங் செய்வது, ஜோதிடம் பார்ப்பது ஆகியவையாக இருந்தன என்பது கூடுதல் தகவல்.

 

சிப்ஸ்

# Ain’t என்பதன் பொருள் Isn’t என்பதுதானே?

ஆம். அது சில நேரம் Aren’t என்பதையும் குறிக்கும்.

# Compact Disc அல்லது Compact Disk எது சரி?

Compact Disc. அதை உருவாக்கியவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பி அதற்கான காப்புரிமையைப் பெற்றிருக்கிறார்கள் (ஆனால், Computer Disk எனலாம்).

# Launch என்றால் தொடங்குவதா?

உற்சாகத்துடனும் உணர்வு பூர்வமாகவும் தொடங்குவது.


தொடர்புக்கு - aruncharanya@gmail.com |
ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்