கேட்டாரே ஒரு கேள்வி
Greenhorn என்பது எந்த வகை இசைக் கருவி?
-------------------------------
Romedy, Hungama என்று சில டி.வி. சேனல்கள் உள்ளனவே, அந்தச் சொற்களின் பொருள் என்ன என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.
‘ஹங்காமா’ என்பது இந்திச் சொல். அதன் பொருள் விதவிதமான, வேடிக்கையான, கொண்டாட்டமான விஷயங்கள். (கோணங்கித்தனமான என்றும் சொல்லலாம்). இந்தச் சொல் ஆங்கிலத்திலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது.
Romedy என்பது Romance, Comedy ஆகியவற்றின் கூட்டு.
சில டி.வி. சேனல்களின் பெயர்கள், குறிப்புகளாக அளிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடியுங்கள். உங்கள் விடைகளை விரைவில் அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
1. ‘Ha Ha’ in Tamil
2. Very large
3. Potassium
4. An American comic strip, created by cartoonist Walt Kelly
5. Nylon is an example of this
6. Kalady was his birthplace
7. A rainbow is known for these
8. Tamil equivalent of a service no more available in India
9. Person in command of a ship
10. Nelumbo nucifera
11. Finding something that had not been known before
12. At the centre of the solar system
-------------------------------
Hurricane என்பதற்கும், Tornado என்பதற்கும் என்ன வித்தியாசம்?
Hurricane என்பதைச் சூறாவளி என்றும், Tornado என்பதை சுழல் காற்று என்றும் தோராயமாகச் சொல்லலாம்.
பொதுவாக அட்லாண்டிக் கடல், வடகிழக்கு பசிஃபிக் கடல் ஆகிய பகுதிகளில் தோன்றும் பெருங்காற்றை Hurricane என்கிறார்கள். The hurricane downed trees and blew roofs off of some houses.
ஸ்பானிஷ் மொழியில் Hurricane என்பது ‘புயலுக்கான கடவுளைக்’ குறிக்கிறது. இதிலிருந்துதான் hurricane என்ற சொல் வந்திருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போரின்போது தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் போர் விமானத்துக்கும் Hurricane என்று பெயரிடப்பட்டது. இதை பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியது.
கடும் இடி, மின்னல், புயல் ஆகியவை ஒரே நேரத்தில் ஏற்படும்போது Tornado உருவாகிறது. குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது இது. அப்போது சுழன்றடிக்கும் காற்று ஏதோ புயல் வடிவ மேகம்போல் காட்சிதரும்.
‘கேட்டாரே ஒரு கேள்வி’ நண்பரே, horn என்று இருப்பதாலேயே அது ஒலி எழுப்பி ஆகி விடாது. ‘இசைக் கருவி’யாகிவிடாது. கொம்பு என்பதையும் horn என்பார்கள்!
ஒரு குறிப்பிட்ட தொழிலில் அல்லது வேலையில் அனுபவமற்ற ஒருவரை greenhorn என்பார்கள். ‘Seasoned veteran’ என்பதற்கு எதிர்ச்சொல்லாக greenhorn என்பதைப் பயன்படுத்தலாம்.
“A greenhorn like you should first undergo proper training”.
Novice, beginner, starter போன்றவற்றுக்குச் சமமான சொல்லாகவும் greenhorn என்பதைக் கொள்ளலாம்.
-------------------------------
Phase something என்பதற்குப் பொருள் என்ன?
‘Face something’ என்றால் ஒன்றை எதிர்கொள்வது. Phase something என்றால் படிப்படியாக ஒன்றை நீக்குவது என்று பொருள். After the introduction of computers, typewriters were phased out.
ஒன்றை நீக்குவது மட்டுமல்ல; ஒருவரை நீக்குவது என்றும் கொள்ளலாம். Our company wants to retrench some staff. I hope they won’t phase me out.
-------------------------------
“If it goes South, I will handle it” என்று ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் ஒருவர் வசனம் பேசினார். இதற்கு என்ன பொருள்?
இது ஒரு அண்மைகாலப் பயன்பாடு. உலக வரைபடத்தைப் பார்த்தால் South என்பது கீழ்ப் புறத் திசை. ஒரு வியாபாரம் தெற்கே நோக்கிப் போகிறது என்றால், அது சரிவை நோக்கிச் செல்கிறது என்று கொள்ளலாம். அதாவது நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் படத்தில் குறிப்பிட்டவர் “அப்படி வியாபாரம் நஷ்டமடைந்தால் அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறுவதாக அர்த்தமாகிறது. அதேபோல வணிகத்தைப் பொறுத்தவரை ‘Going North’ என்று கூறினால் அந்த வணிகம் சிறப்பாகச் செழிக்கிறது என்றும் அந்த நிறுவனம் லாபகரமாக இயங்குகிறது என்றும் பொருள் (அதற்காக east அல்லது west என்றால் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையா என்று கேட்கக் கூடாது. அப்படியெல்லாம் பயன்படுத்துவதில்லை).
To go south என்றால் to become less valuable என்று(ம்) அர்த்தம்.
-------------------------------
Fire-brand என்று ஒரு அரசியல்வாதியை ஆங்கில நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்கள். இதற்கு என்ன பொருள்?
ஒரு லட்சியம் தொடர்பாக மிகுந்த ஈடுபாடுகொண்ட ஒருவரை fire-brand என்பார்கள். He looks ordinary. But when he speaks you will recognize the radical fire-brand.
ஆட்சியை எதிர்த்து அரசியல் அல்லது சமூகக் கலவரங்களை உண்டாக்கும் ஒருவரை fire-brand என்பதுதான் சமீபகாலத்தில் வழக்கமானதாகிவருகிறது.
-------------------------------
Laconic என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் ஒருவர். ‘தொடக்கம் இதுதான்’ பகுதியில் பல வாரங்களுக்கு முன்பு இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். (Laconic என்றால் சுருக்கமான, செறிவான என்று பொருள்). என்றாலும் நான் அண்மையில் படித்த ஒரு சுவையான பகுதியைப் பகிர்ந்துகொள்ள, இதை இங்குப் பயன்படுத்திக்கொள்கிறேன். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கூலிட்ஜ் ஒரு பார்ட்டியில் பங்குகொண்டார். அப்போது அவருடன் பேச வேண்டுமென்ற விருப்பத்தில் பெண்மணி ஒருவர் அவரிடம் சென்று “மிஸ்டர் கூலிட்ஜ், நீங்கள் என்னிடம் இரண்டு சொற்களைவிட அதிகமாகப் பேசி விடுவீர்கள் என்று என் தோழியிடம் பெட் கட்டியிருக்கிறேன்” என்றார் (ஆங்கிலத்தில்தான்!).
அதற்கு ஜனாதிபதியின் பதில், ‘You lose’. என்ன ஒரு laconic reply!
-------------------------------
தொடக்கம் இப்படித்தான்
Scapegoat என்பதன் பொருள் என்ன? எதற்காக அந்தப் பெயர்?
Escape goat என்பதுதான் scapegoat என்று ஆகிவிட்டது! பைபிளின் ஒரு பகுதியில், “ஒரு ஆட்டின் தலையில் ஒரு கல்லைக் கட்டுவார்கள். அதில் அந்த ஊர் மக்கள் செய்த பாவங்களை (உருவகமாகத்தான்) வைப்பார்கள். பிறகு அந்த ஆட்டைக் காட்டுக்குள் விரட்டி விடுவார்கள்” என்று வருகிறதாம்.
அதாவது பாவங்களைச் சுமக்கும் ஆடு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கக் கூடாதாம். “எவனோ செய்த தப்புக்கு நான் பலிகடா ஆயிட்டேன்” என்று சிலர் கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதுதான் scapegoat ஆகிவிடுவதும். ஒருவர் செய்த தவறுக்கு இன்னாருவர் பழியைச் சுமக்க நேர்வது.
Instead of admitting our mistakes we want a scapegoat to take the blame away from ourselves.
சிப்ஸ்
# Princes, Princess என்ன வித்தியாசம்?
முறையே இளவரசர்கள், இளவரசி.
# Distorian என்று ஒரு சொல் இருக்கிறதா?
பேச்சு வழக்கில் உண்டு. வரலாற்றைத் திரித்துக் கூறுபவர்.
# Skycap என்றால்?
விமான நிலையத்தில் சாமான்களை எடுத்துச் செல்ல உதவுபவர் (Porter).
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago