ஒளிப்படம் எடுக்கப் படிக்கலாம்!

By முகமது ஹுசைன்

யற்கையைவிடச் சிறந்த ஓவியம் எதுவும் இல்லை. நமது கண்ணைவிடச் சிறந்த ஒளிப்படக் கருவி எதுவும் இல்லை. ஓவியத்தைக் காட்சிப்படுத்துவது கண்களின் அனிச்சைச் செயல். ஆனால், கேமராவில் காட்சியைப் படம் எடுக்க நமது விருப்பமும் ரசனையும் திறமையும் தேவைப்படுகின்றன. ஆர்வமும் நேரமும் இருந்தால் ஒளிப்படக் கலையைக் கற்பது எளிது. பெரிய திரைப்படக் கல்லூரிகளில் மட்டுமே கற்பிக்கப்படும் ஒளிப்படக் கலையை, இன்று இலவசமாகக் கற்பதற்கு இணையத்தில் பல வகுப்புகள் உள்ளன.

லென்ஸில் கவனம்

கிரேக்கத்திலிருந்து ‘ஃபோட்டோகிராஃபி’ எனும் சொல் எப்படி உருவானது, ஊசித் துளை ஒளிப்படக் கருவி முதன்முதலில் எப்படி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் உங்களுக்கு அலுப்பூட்டக்கூடும். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை இணைய வகுப்புகளில் தெரிந்துகொள்ளலாம். ஒளிப்படக் கலையில் என்னென்ன பிரிவுகள் உள்ளன, அவற்றில் உங்களுக்கு ஏற்ற பிரிவு எது, அதை எங்கு, எப்படிக் கற்பது, என்பதை மட்டும் பார்ப்போம்.

ஸ்மார்ட்ஃபோன் மூலமாகப் படம் எடுப்பதன் மூலம் இன்று நம்மில் பலர் ஒளிப்படக் கலைஞராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், தொழில்முறை ஒளிப்படக் கலைஞராக மாறுவதற்கு ஸ்மார்ட்ஃபோன் மட்டும் போதாது. டி.எஸ்.எல்.ஆர். கேமரா அதற்குத் தேவை. ‘நிகான்’, ‘கெனான்’, ‘சோனி’, ‘பானசோனிக்’, ‘ஒலிம்பியா’ எனப் பல நிறுவனங்கள் கேமராக்களைத் தயாரிக்கின்றன. இவற்றில் நிகானும் கெனானும் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர்களின் விருப்பத் தேர்வாக இன்றும் உள்ளன. மிரர்லெஸ் கேமரா என்றொரு வகை கேமரா சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. சோனியும் பானசோனிக்கும் அதில் முன்னோடிகளாக உள்ளன.

சிறந்த ஒளிப்படத்தை எடுப்பதற்கு கேமராவைவிட முக்கியமானது நாம் பயன்படுத்தும் லென்ஸ். சிறந்த லென்ஸின் விலை கேமராவைவிடப் பல மடங்கு விலை உயர்ந்ததாக இருக்கும். லென்ஸை வாங்கினால் மட்டும் போதாது, எந்த லென்ஸை எந்தச் சூழ்நிலைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற தொழில்நுட்ப அறிவும் அனுபவ அறிவும் நமக்கு இருக்க வேண்டும். எவ்வளவு விலை கூடியதாக இருந்தாலும், சூழ்நிலைக்கு ஒவ்வாத லென்ஸைப் பயன்படுத்தினால், காட்சிப்படுத்தப்படும் படம் மிகவும் மோசமானதாகவே இருக்கும். இங்குச் சூழ்நிலை என்பதை ஒளிப்பட வகை என்றும் சொல்லாம்.

கலையின் சூட்சுமம்

ஒளிப்பட வகையைப் பொறுத்தவரை, portrait, landscape, action, sports, nature, wildlife, street, candid எனப் பல உள்ளன. ஸ்டுடியோவில் எடுக்கப்படும் ஒளிப்படம் portrait வகையைச் சார்ந்தது. கேமராவும் லென்ஸும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் அங்கு இருக்கும் ஒளியின் அடர்த்தி. ஏனென்றால், ஒளிப்படத்தின் தரத்தைத் தீர்மானிப்பதில் ஒளிக்கு பெரும் பங்கு உண்டு. ஒளியைப் பொறுத்தவரை இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியே சிறந்தது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், சூரிய ஒளியை ஈடுசெய்யும் அளவுக்கு இப்போது ஆற்றல் வாய்ந்த ஃப்ளாஷ்கள் (flash) வந்துவிட்டன.

Framing, exposure, aperture, shutter speed, iso, metering போன்ற வார்த்தைகள் உங்கள் தலையைச் சுற்றச் செய்யலாம். காட்சி வடிவமைப்பு, ஒளியின் அடர்த்தி, ஒளிப் பாயும் துளையின் விட்டம், அந்தத் துளையைத் திறந்து மூடும் வேகம், ஒளியின் அடர்த்தியை அதிகரிக்கும் விகிதம், படம் பிடிக்கும் காட்சியின் எந்தப் பகுதியில் இருக்கும் ஒளியை முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்றவைதான் அவை. ஒரு நல்ல ஆசிரியரால் பத்தே நிமிடத்தில் அதை உங்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட முடியும். ஆனால், அவற்றில் நீங்கள் வல்லுநராவது, உங்களின் இடைவிடாத பயிற்சியிலும் முயற்சியிலும் உள்ளது.

ஆன்லைனில் ‘கிளிக்’ செய்து படிக்க...

https://www.geofflawrence.com/photography_tutorials.html#basics

http://www.nikon.co.in/en_IN/learn_and_explore/photography_tutorials

https://photographylife.com/category/photography-tutorials

https://ocw.mit.edu/courses/architecture/4-341-introduction-to-photography-and-related-media-fall-2007/

https://lifehacker.com/5815742/basics-of-photography-the-complete-guide

https://jerad.courses/p/ditch-auto-start-shooting-in-manual

https://www.udemy.com/courses/search/?q=FREE%20Photography%20Course&src=ukw

https://www.cambridgeincolour.com/tutorials.htm

https://www.udemy.com/using-a-photographic-light-meter/

https://tv.adobe.com/show/getting-started-with-adobe-photoshop-lightroom-5/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்