கேள்வி நேரம்: அறிவு விளக்கேற்றியவர்கள்

By ஆதி வள்ளியப்பன்

1. இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர், கல்வியாளர் மரியா மாண்டிசோரி. ஆண்கள் மட்டுமே படித்த தொழில்நுட்பப் பள்ளியில் அதிரடியாகச் சேர்ந்து ஒரு பொறியாளராக முதலில் அவர் முயன்றார். விரைவிலேயே மனமாற்றம் அடைந்து ரோம் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் சேர்ந்து சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றார். அவருடைய கல்விக் கோட்பாடு அவருடைய பெயரிலேயே அறியப்படுகிறது. அந்தக் கோட்பாட்டுக்கான அறிவியல்பூர்வ கற்பித்தல் முறையை அவர் வகுத்தளித்தார். அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு என்ன?

2. தோட்டம், தோப்பு, நூலகத்துடன் சாந்திநிகேதன் என்ற பரிசோதனை முறைப் பள்ளியை 1901-ல் ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கினார். தன் நோபல் பரிசுப் பணத்தை சாந்திநிகேதனின் வளர்ச்சிக்கு வழங்கினார். பிற்காலத்தில் விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழகமாக விரிவடைந்த சாந்திநிகேதனில், ஆரம்ப காலத்தில் மரத்தடியிலேயே பாடம் நடத்தப்பட்டது. பகலில் பாடங்களை நடத்திய தாகூர், மதியம்-மாலையில் பாடப் புத்தகங்களையும் எழுதினார். சாந்தி நிகேதனில் படித்த புகழ்பெற்ற வங்கத் திரைப்பட இயக்குநர் யார்?

3. இந்திய தத்துவச் சிந்தனையாளர்களில் ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே.). உலகளாவிய பார்வை, மனித இனம்-சுற்றுச்சூழல் மீதான அக்கறை, அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய ஆன்மிக மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி அமைய வேண்டுமென வலியுறுத்தியவர். அவரது கல்விக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவரும் அன்னி பெசன்ட்டும் 1928-ல் உருவாக்கியதே ‘கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை’. தான் பிறந்த ஊரான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் அவரது கல்விக் கோட்பாட்டின்படி ஒரு பள்ளியையும் ஜே.கே. நிறுவினார். அதன் பெயர் என்ன?

4. பிரேசிலிய கல்வியாளர், தத்துவச் சிந்தனையாளர் பாவ்லோ ஃபிரெய்ரே. விமர்சனபூர்வக் கற்பித்தல் முறையை வலியுறுத்தியவர். ‘ஒடுக்கப்பட்டோருக்கான கற்பித்தல் முறை’ என்ற அவருடைய புகழ்பெற்ற புத்தகம், அந்த இயக்கத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்று. அவருடைய கல்விக் கோட்பாடு யாருடைய கோட்பாட்டின் தொடர்ச்சி?

5. இத்தாலிய நவீன மார்க்சியச் சிந்தனையாளர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர் அந்தோனியோ கிராம்சி. உழைக்கும் வர்க்கத்தினரிடம் இருந்து சிந்தனையாளர்கள் உருவாவதற்கு, அவர்களுக்குக் கல்வி தருவதை ஊக்குவிக்க வலியுறுத்தியவர். யாருடைய பாசிஸ ஆட்சியின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்?

6. ‘மீசையுள்ள அம்மா’ என்ற பட்டப் பெயரைப் பெற்ற ஆசிரியர், குஜராத்தைச் சேர்ந்த கீஜுபாய் பாதேகா. உயர் நீதிமன்ற வழக்குரைஞரான அவர், தன் மகனுக்காகக் கல்வித் தேடலில் இறங்கினார். பவநகரில் ‘பால மந்திர்’ என்ற பள்ளியையும் நிறுவினார். மாண்டிசோரி கல்வி முறையை வலியுறுத்தி, அவர் எழுதிய புகழ்பெற்ற புத்தகம் எது? தமிழிலும் அது வெளியாகியுள்ளது.

7. கட்டுப்பெட்டித்தனமான, வழக்கமான பள்ளிக் கற்பித்தல் முறை குறித்து புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ ஃபிரெய்ரே தன் சகாக்கள் மூவருடன் இணைந்து ஜெனிவாவில் Institute of Cultural Action (IDAC) என்ற அமைப்பை உருவாக்கினார். பள்ளிகள் செயல்படும் முறை குறித்து புகழ்பெற்ற ஓர் ஆவணத்தை 1978-ல் அந்த அமைப்பு வெளியிட்டது. நகைச்சுவையாகவும் எளிமையான வகையிலும் உரையாடும் இந்தப் புத்தகத்தைக் கோட்டோவியங்களுடன் கோவாவைச் சேர்ந்த Other India Press பதிப்பித்தது. தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் புத்தகத்தின் பெயர் என்ன?

8. ரயில்பெட்டிகளைப் பள்ளி அறைகளாகக் கொண்ட ஜப்பானியப் பள்ளி டோமாயி. இரண்டாம் உலகப் போருக்குச் சில ஆண்டுகள் முன்னதாக தலைநகர் டோக்கியோவில் தனித்தன்மை கொண்ட இந்தப் பள்ளியை உருவாக்கியவர் கோபயாஷி. பிற்காலத்தில் ஜப்பானின் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் டெட்சுகோ குரோயாநாகி, டோமாயி பள்ளியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் உலகப் புகழ்பெற்ற புத்தகத்தை எழுதினார். தமிழிலும் வெளியாகியுள்ள அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன?

9. அமெரிக்க எழுத்தாளரும் கல்வியாளருமான ஜான் ஹோல்ட் வழக்கமான கற்பித்தலுக்கு மாற்றாகப் புதிய கற்பித்தல் முறைகளை வலியுறுத்தியவர். இளையோர் உரிமைகளை வலியுறுத்திய முன்னோடி. கல்வி சார்ந்து புகழ்பெற்ற பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவற்றில் இரண்டு முக்கிய நூல்கள் எவை?

10. இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஈ.ஆர். பிரெய்த்வெய்ட் போர் விமானி வேலைக்குப் போனார். நிறவெறியால் அந்த வேலையைத் துறந்து, ஆசிரியர் ஆனார். அங்கும் நிறவெறியால் பாதிக்கப்பட்டார். அதேநேரம் தன் வகுப்பில் பருவ வயதின் உச்சத்தில் இருக்கும் மாணவர்கள், விரைவில் பெரியவர்களாகிவிடுவார்கள் என்பதால், எப்படிப் பாடம் நடத்த வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுக்கச் சொல்கிறார். அந்த முயற்சி வெற்றி தருகிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் 1959-ல் தன்வரலாற்று நாவலை எழுதினார். 1967-ல் திரைப்படமாகவும் வெளியான அதன் பெயர் என்ன?

விடைகள்

answersjpg100 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்