பி
ரபலக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் திரை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு இன்றைக்கு மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது. ஆனால், அப்படிப் படித்து முடித்துவிட்டு வருபவர்களும்கூட, அவர்கள் பிரகாசிக்க விரும்பும் துறையில் ஏற்கெனவே இருப்பவர்களிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றால்தான் ஒரு தெளிவு கிடைக்கிறது. ‘பட்ட’ அறிவோடு பட்டறிவும் தேவைப்படும் துறையாகத் திரைத் துறை இருப்பதுதான் இதற்குக் காரணம்.
மேற்சொன்ன இரண்டு அறிவோடும் திரைத் துறையை அணுகுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது சென்னை, கே.கே.நகரில் செயல்படும் ‘தியேட்டர் லேப்’. திருச்சியிலும் கோயம்புத்தூரிலும் இதன் கிளைகள் செயல்படுகின்றன. இந்தியச் சினிமாவுக்கு ஏற்றவாறு ‘ஜென் இன் தியேட்டர் ஆக்டிங் மெதடாலஜி’யை ஒரு புத்தக வடிவத்தில் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இதன் நிறுவனரான ஜெய ராவ், கூத்து பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர். தொடக்கத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கு அரங்கம் சார்ந்த பயிற்சிகளை வழங்கி அவர்களின் கவனத்தைக் கலையின் மூலமாக வளர்த்தெடுத்தவர். நடிகை ரோகிணி, தமிழச்சி தங்கபாண்டியன், வெளி ரங்கராஜன், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் தங்களின் கலைசார்ந்த பங்களிப்பை இந்தப் பயிற்சி மையத்துக்கு அளித்திருக்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நாடகப் பயிற்சிகளை நடத்தி, கலை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் சிறுகதைகளை நாடகமாக்கி இருக்கிறது தியேட்டர் லேப். 2015-ல் தரமான கல்வித் தகுதிக்கான ஐ.எஸ்.ஓ. சான்றைத் தியேட்டர் லேப் பெற்றது.
நடிப்புக்கு அரசு சான்றிதழ்
“நடிக்க விரும்பி வருபவர்களுக்கு, தனித்துவம் வாய்ந்த நடிகர்களாக உருவாவதற்கு அவரவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு, பாடத்திட்டத்தை வடிவமைத்துத் தருகிறோம். நடிப்பையும் பரிசோதனைகள் மூலமாக மெருகேற்றலாம் என்பதால்தான் தியேட்டர் லேப் என்று பெயர் வைத்திருக்கிறோம்” என்கிறார் ஜெய ராவ்.
தியேட்டர் லேப்பில் ‘டிப்ளமோ இன் தியேட்டர் ஆக்டிங், டிப்ளமோ இன் ஃபிலிம் ஆக்டிங்’ படிப்பவர்களுக்குத் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் கிடைக்கும். ஒரு வருடத்துக்கான படிப்பைப் படித்து அரசாங்கச் சான்றிதழ் பெறலாம். இந்தச் சான்றிதழ் மேற்கொண்டு துறை சார்ந்த படிப்புக்கு உதவும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கலை சார்ந்த ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
ஆறு மனமே ஆறு
படைப்பாளராக இருக்க வேண்டும். சமூகப் பிரக்ஞையோடு இருக்க வேண்டும். விஷய ஞானத்தோடு இருக்க வேண்டும். பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். கற்பனைச் செறிவுள்ளவராக இருக்க வேண்டும். அனுசரணையோடு இருக்க வேண்டும். இந்தக் குணங்களை வளர்த்துக்கொண்டால் எவரும் தங்களின் துறையில் சாதிக்க முடியும். திரைத் துறையில் ஜெயிப்பதற்கும் இது பொருந்தும் என்கிறார் ஜெய ராவ். நடிகர்கள் ஆதி, அதர்வா, தமன்குமார், கதிர், முனிஸ்காந்த், சென்றாயன், நடிகைகள் பிரீத்தி, சுவாதி, கிருத்திகா உள்ளிட்ட பலரும் இந்தப் பள்ளியில் படித்துத் திரைத் துறையில் பிரபலமாகி இருக்கின்றனர்.
தொடர்புக்கு: 96888 58882
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago