மாலை முழுவதும் விளையாட்டு என்றார் பாரதி. ஆனால், நாள் முழுவதும் படி… படி… என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் வலியுறுத்துவதாலேயே பல குழந்தைகளுக்குப் படிப்பின் மீதான இயல்பான நாட்டம்கூடக் குறைந்துபோகிறது.
விருப்பம் இன்மையால் பள்ளியிலிருந்து இடைநின்று போகும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்துவருகிறது கடலூரில் உள்ள ‘சங்கம் ஸ்போர்ட்ஸ் அண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி’.
மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பிப் படிப்பிலும் விளையாட்டிலும் திறனை மேம்படுத்த முயல்கிறது. “நானே பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டவன்தான்” என்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மாஜி சிங்.
விளையாட்டுத் திறனை வளர்ப்போம்
“11-ம் வகுப்பு இடைநிற்றலுடன், கராத்தே, ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை 15 ஆண்டுகள் கற்று நிபுணத்துவம் பெற்றேன். ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ மனித உரிமை அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளராக எட்டு மாவட்டங்களில் களப் பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில்தான் விளிம்புநிலை மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்பாடுகள் பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து எட்டாண்டுகள் நான் பணியாற்றிய ‘ரோட்’ நிறுவனம், சங்க வளர்ச்சி சார்ந்த பணிகளைத் திட்டமிட உதவியது. இப்படியாகத் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவி, வழிகாட்டுதலுடன் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளை செய்ய ஆரம்பித்தேன்” என்கிறார் மாஜி சிங்.
எழுத்தறிவு மட்டும் போதாது என்ற புரிதல் ஏற்பட்டவுடன், விளையாட்டு, வாழ்திறன் வளர்ச்சிக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார் இவர். அதிலும் கல்வி, வேலைத்திறனில் பின்தங்கி இருப்பவர்களை விளையாட்டுத் திறன் மூலமாக முன்னேற்றலாம் என்ற யோசனை வந்தது. அதன் பின்னர் ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள், விளிம்புநிலையை மாணவர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்தப் பல்வேறு விளையாட்டு சங்கங்களுடன் கைகோத்தார்.
“மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கான முயற்சிகளை எங்களுடைய சங்கம், அறக்கட்டளை மூலமாக எடுத்தேன். அதோடு மாநில விளையாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதித் தேர்வுகளில் பங்கேற்க மாணவர்களுக்குப் பயிற்சிக்கான ஏற்பாடு செய்தேன்.
இதன் விளைவாக தமிழ்நாடு ஜுடோ சங்கம், தமிழ்நாடு தடகளச் சங்கம், தமிழ்நாடு ஊரக விளையாட்டுச் சங்கம் ஆகியவற்றின் உதவியாலும், தனிநபர்கள் நிதியுதவியாலும் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகளை தற்போது ஒருங்கிணைத்துவருகிறேன்” என்கிறார்.
சங்கம் அறக்கட்டளையின் வழியாக கடந்த மூன்றாண்டுகளில் விளையாட்டுப் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை எட்டிப்பிடிக்க இன்று பல இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்!
கபடியில் கலக்கும் தாரகை
சுப்பிரமணியபுரம் அரசுப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். கபடி, கோகோ விளையாட்டுகளில் எனக்கு விருப்பம் அதிகம். இந்த அமைப்பின் உதவியால், ரூரல் கேம் ஃபெடரேசன் ஆப் இந்தியா நடத்திய கபடி போட்டியில் தேசிய அளவில் டெல்லி, ஹரியாணாவுக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். தேசிய அளவில் சப் ஜூனியர் பிரிவில் பல பரிசுகளை வென்றிருக்கிறோம்.
- கபடி வீராங்கனை அருந்தமிழ்
ஓடச் சொல்லித் தருகிறேன்
தொடக்கத்தில் எனக்கு கோகோ விளையாட்டில் ஆர்வம் இருந்தது. என்னுடைய ஆட்டத் திறனைப் பார்த்த மாஜி சார்தான் எனக்கு தடகளத்தில் பயிற்சி கொடுத்தார். மாநில அளவில் பல போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். அதிதூர தடகளத்தில் (1500 மீட்டர், 3000 மீட்டர்) தேசிய அளவில் தமிழகத்தின் சார்பாகப் பங்கெடுத்திருக்கிறேன். மாதத்துக்கு இரண்டு மாரத்தான் போட்டியில் கலந்துகொள்வது என்னுடைய வழக்கம்.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷனில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறேன். என்னை வளர்த்தது விளையாட்டுதான் என்பதால் நான் படித்து முடித்ததும் வேலையில் தஞ்சமடையவில்லை. ஆறு கிராமங்களில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முறையான தடகளப் பயிற்சி அளித்துவருகிறேன்.
- மாரத்தான் வீராங்கனை பிரபாவதி
- தொடர்புக்கு: 9500647461
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago