கனவை மெய்ப்பட வைப்பவர்கள்

By வா.ரவிக்குமார்

ருவருக்கு ஒருவேளை உணவை வாங்கிக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தியைவிட, ஒருவரது கல்விக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தியே தனி. முன்னது உடனடி விளைவு. உடனடி சந்தோஷம். இரண்டாவதில் கொஞ்சகாலம் பொறுத்திருக்க வேண்டும். படிப்புக்கான உதவியைப் பெற்றவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகளில் பிரகாசிப்பதிலேயே உதவியவர்களுக்கு மனம் குளிர்ந்துவிடும். அந்தப் படிப்பின் மூலமாக நல்லதொரு வேலையும் கிடைத்துவிட்டால், உதவியவர்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும். அப்படியொரு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் ‘ஏ.பி.ஜே. விஷன் இந்தியா 2020’ எனும் பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுவினர்.

படிக்க உதவும் வாட்ஸ் அப் குழு

2017-ம் ஆண்டில் 250 ஆதரவற்ற குழந்தைகளுடன் தித்திக்கும் தீபாவளியைத் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் கொண்டாடினர். பிரியும்போது, தனி ஒரு மனிதரின் வாழ்க்கையில் அவரை மட்டும் அல்லாமல் அவருடைய குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் என்று தோன்றியது. உயர்ந்த கருவியாக இருக்கும் கல்வியைத் தங்களால் முடிந்த அளவுக்கு வசதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கலாம் எனும் முடிவோடு பிரிந்தனர்.

“தாய், தந்தை இல்லாமல் வறுமையில் படிப்பவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்து படிப்பவர்கள், படிப்பைப் பாதியில் கைவிடும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம்” என்கிறார் கனவு மெய்ப்பட அறக்கட்டளையின் நிறுவனரான தினேஷ் ஜெயபாலன்.

VS208D தினேஷ் ஜெயபாலன்

ஆறு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம் இதுவரை 18 மாணவர்களுக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதற்காக ஏறக்குறைய 2 லட்சத்து 80 ஆயிரம்வரை உதவி இருக்கின்றனர். குழுவில் இல்லாதவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் பேரிலும் மாணவர்களின் குடும்பப் பின்னணி, படிப்பில் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உதவுகிறது இந்த அமைப்பு.

முதன்முதலாக ஒரு கல்லூரி மாணவிக்கு 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்தோம்.

மூன்றே நாட்களில் அந்தத் தொகையைக் குழுவில் இருப்பவர்களின் உதவியோடு கட்ட முடிந்தது. அந்த உதவியைப் பெற்ற மாணவி கண்ணீரோடு அதை ஏற்றுக்கொண்டு நன்றியைக் கண்களில் காட்டியபோது, இன்னும் நிறையப் பேருக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகம் பிறந்தது” என்கிறார் அறக்கட்டளையின் செயலாளர் கல்யாணகுமார் வீரபாண்டியன்.

தொடர்புக்கு: 9791006854

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்