த
மிழகத்தில் ஆள்பவர்கள் மீதும் புகார்கள் வருகின்றன. ஆளுநர் மீதும் விமர்சனங்கள் வருகின்றன.
ஆளுநரே அழைத்து ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதுதான் கடந்த வார ‘வறுவறு!’ அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, பேராசிரியர் – பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பற்றி. பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, ஆளுநரும் சளைக்காமல் ‘சான்றுகளை’ எடுத்து வைத்துப் பேசினார்.
பேச்சு பேச்சாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிச் செல்ல. ஆரம்பித்தது அடுத்த ‘பிரேக்கிங் நியூஸ்!’
ஏற்கெனவே மிகவும் கொந்தளிப்பாக இருந்த அந்தத் தருணங்கள், ஆளுநரின் இந்தச் செயலால், மேலும் கொதிப்படையத் தொடங்கின.
‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே இன்னொரு கொடுமை ‘ஜிங்கு ஜிங்கு’ன்னு ஆடுச்சாம்’ என்று ஒரு சொலவடை இருக்கிறது. அதாவது, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது மாதிரி.
கிட்டத்தட்ட இதே அர்த்தத்துடன் ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது. ‘Jumping from the frying pan, into the fire’ என்பதுதான் அது. அதாவது, ‘வறுக்கப்படும் வாணலியில் இருந்து, தீயில் விழுந்த மாதிரி’ என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
15-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் அப்ஸ்டீமியம் என்பவர், ஈசாப் கதைகளை அடிப்படையாகக் கொண்டு 200 கதைகளை எழுதினார். அதில் ஒரு கதை, வாணலியில் வறுக்கப்படும் மீன்களைப் பற்றியது.
அப்போதுதான் நதியிலிருந்து பிடிக்கப்பட்டு வந்த மீன்கள் சில, உயிருடன் வாணலியில் இட்டு வறுக்கப்படுகின்றன. அந்தச் சூட்டைத் தாங்க முடியாத மீன்களில் ஒன்று, ‘யப்பா… இதுல இருந்து தப்பிக்க, கீழே குதிச்சிடுவோம்’ என்று சொல்ல, அதை நம்பி அத்தனை மீன்களும் வாணலியில் இருந்து, வெளியே குதித்தன. ஆனால்… விதி வலியது ஆயிற்றே! அவை நேராக, கனன்று எரியும் அடுப்புக்குள் விழுந்துவிட்டன. அதிலிருந்து வந்ததுதான் மேற்கண்ட சொற்றொடர்.
‘Jumping from the frying pan’ என்பதற்குப் பதிலாக ‘Out of the frying pan’ என்றும்கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், அர்த்தம் ஒன்றுதான். ஆனால் அர்த்தம், அநர்த்தம் ஆகிவிடக் கூடாதே..? நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, அது மற்றவர்களால் வேறொன்றாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு அநேக சாத்தியங்கள் உள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago