1. டெல்லி நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ல் ஆங்கிலேயர் காலத்திலேயே திறந்து வைக்கப்பட்டது. அப்போது வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபு திறந்துவைத்தார். இதற்கும் இந்திய நாடாளுமன்றத்தின் பிந்தைய செயல்பாடுகளுக்கும் தொடர்பு உண்டு. இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகள் எந்த மாதிரியில் வடிவமைக்கப்பட்டன ?
2. நாட்டு விடுதலைக்கு முந்தைய மத்திய சட்டப்பேரவையின் தலைவர், விடுதலைக்குப் பிந்தைய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் சபாநாயகர், மக்களவையின் முதல் சபாநாயகர் ஆகிய பெருமைகளை அடுத்தடுத்து பெற்றவர். ‘மக்களவையின் தந்தை’ என்றும் போற்றப்படும் குஜராத்தைச் சேர்ந்த அவருடைய பெயர் என்ன?
3. இந்திய நாடாளுமன்றம் Bicameral (பைகாமெரல்) முறையில் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. Bicameral என்றால் என்ன?
4. லோக் சபா எனப்படும் மக்களவைக்கு அந்தப் பெயர் வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இந்த அவையில்தான் ஒரு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியும் என்பது கூடுதல் தகவல்.
5. நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக் சபா), மாநிலங்கள் அவை (ராஜ்ய சபா) என இரண்டு அவைகள் உண்டு. மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. மாநிலங்கள் அவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
6. சரி, மாநிலங்கள் அவைக்கு எம்.எல்.ஏக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்காமல், நேரடி நியமன உறுப்பினர்களாக எத்தனை பேரை நியமிப்பதற்கான அனுமதியைக் குடியரசுத் தலைவர் பெற்றிருக்கிறார்?
7. வழக்கப்படி ஒவ்வோர் ஆண்டும் மூன்றுமுறை நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடத்தப்படும். ஆண்டுக்கு இரண்டு கூட்டத் தொடர்களாவது குறைந்தபட்சம் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின் பெயர்கள் என்னென்ன?
8. புதிய குடியரசுத் தலைவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. அதே நேரம் தலைமை நீதிபதியை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர் யார்? இந்திய நாடாளுமன்ற முறையின் மூன்றாவது அங்கமாகக் கருதப்படும் இவரே, அரசைக் கலைக்கும் உரிமையையும் பெற்றிருக்கிறார்.
9. மக்களவையின் தலைவர்கள் சபாநாயகரும் துணை சபாநாயகரும். எம்.பி.களிடையே நடத்தப்படும் தேர்தல் மூலம் இருவருமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை சபாநாயகரே தலைமையேற்று நடத்துவார். அதே நேரம் மாநிலங்கள் அவையை நடத்துவதற்கான முதன்மை அதிகாரத்தைப் பெற்றவர் யார்?
10. மக்களவைக்குப் போட்டியிடக் குறைந்தபட்ச வயதுத் தகுதி என்ன?
விடைகள்
1. வெஸ்ட்மினிஸ்டர் எனப்படும் பிரிட்டன் நாடாளுமன்ற முறை.
2. ஜி.வி. மவலாங்கர்
3. இரண்டு அவைகளின் மூலமாகச் சட்டம் இயற்றப்படுவது.
4. இந்த அவைக்கான உறுப்பினர்களைத் தேர்தலில் வாக்களித்து மக்கள் தேர்ந்தெடுப்பதால்.
5. 250
6. 12
7. பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம்
8. அரசு அறிவுறுத்தலின்படிதான் என்றாலும், தலைமை நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.
9. குடியரசு துணைத் தலைவர்
10. 25
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago