சேதி தெரியுமா? - கிராம மேம்பாட்டுக்கு உலக வங்கி நிதி

By கனி

தமிழகத்தில் உள்ள கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 10 கோடி டாலர் (6,400 கோடி) நிதி வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் ஜனவரி 31அன்று தெரிவித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் உலக வங்கியும் மத்திய அரசும் ஜனவரி 30 அன்று கையெழுத்திட்டன. தமிழ்நாடு கிராமப்புற மாற்றத்துக்கான இந்தத் திட்டத்தால் 26 மாவட்டங்களும் 4 லட்சம் மக்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கணினித் தமிழ் முன்னோடி தகடூர் கோபி மறைவு

கணினியில் தமிழ் ‘எழுத்துரு மாற்றி’ உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிவந்த தருமபுரியைச் சேர்ந்த தகடூர் கோபி என்று அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் (42) ஜனவரி 28 அன்று மாரடைப்பால் காலமானார். பல்வேறு எழுத்துரு வடிவங்களையும் ஒருங்கிணைத்து ஒரே வடிவிலான எழுத்துருவாக (யுனிகோடு) மாற்றிக்கொள்ளும் வசதியை உருவாக்கியதில் இவர் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர். கணினி மென்பொருள் துறையில் பணியாற்றிவந்த இவர், ‘அதியமான் மாற்றி’, ‘தகடூர் தமிழ் மாற்றி’ ஆகிய எழுத்துரு மாற்றிகளை வெளியிட்டுள்ளார். அத்துடன், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை இவர் உருவாக்கியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தானின் அஜ்மீர், அல்வர் நாடாளுமன்றத் தொகுதிகள், மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதி, மேற்கு வங்கத்தின் நபோரா சட்டப்பேரவைத் தொகுதி, உலூபேரியா மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு ஜனவரி 29 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 1 அன்று நடந்தது. இதில் ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும் அபார வெற்றிபெற்றனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்தனர். அத்துடன், மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இருவரும் இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

தங்கம் வென்றார் மேரி கோம்

ஐந்துமுறை உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் ஆகிய பெருமைகளைப் பெற்ற மேரி கோம், பிப்ரவரி 2 அன்று டெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேசக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்றார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜோஸியை எதிர்த்து விளையாடிய மேரி கோம், 48 கிலோ பிரிவில் 4-1 என்ற கணக்கில் தங்கம் வென்றிருக்கிறார். ஆடவர் பிரிவில், இந்தியாவின் சஞ்ஜீத், 91 கிலோ பிரிவில் முதல் தங்கத்தை வென்றார்.

 

2018-19: மத்திய பட்ஜெட் வெளியீடு

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இலவச மருத்துவத் திட்டத்துக்கு ரூ. 1,200 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடிப் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
 

6CHGOW_DEMOCRACYrightஜனநாயகம்: 42-வது இடத்தில் இந்தியா

2017-ம் ஆண்டின் உலகளாவிய ஜனநாயகப் பட்டியலை (Global Democracy Index) பிப்ரவரி 1 அன்று பிரிட்டனைச் சேர்ந்த ‘எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் ’ (EIU) நிறுவனம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 165 சுதந்திரமான நாடுகளில் இந்தியா 42-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2016-ம் ஆண்டு, இந்தப் பட்டியலில் 32-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு பத்து இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் மொத்த மதிப்பெண் 7.81 புள்ளிகளிலிருந்து 7. 23 ஆகச் சரிந்திருக்கிறது. நார்வே, ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, டென்மார்க், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் இந்த ஜனநாயகப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்திருக்கின்றன. அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகள் சீர்கெட்ட ஜனநாயக நாடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

 

இந்தியா: 6-வது பணக்கார நாடு

நியூ வேர்ல்ட் வெல்த் (New World Wealth) என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள். தனி நபர்களின் சொத்து, பணம், பங்குகள், வியாபார முதலீடுகள் என அனைத்தையும் உள்ளடக்கி நாடுகளின் சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், இதில் அரசின் நிதி கணக்கில் சேர்த்துகொள்ளப்படவில்லை. இந்தப் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்திருக்கின்றன.

 

6CHGOW_CASTRO_SONஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட் (Diaz-Balart) மன அழுத்தம் காரணமாக பிப்ரவரி 1 அன்று தற்கொலை செய்துகொண்டார். ஃபிடலிட்டோ (Fidelito) என்ற பெயரில் அறியப்பட்ட பலார்ட், சில மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கியூபா ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. 68 வயதான அணு இயற்பியலாளரான இவர், கியூபா விஞ்ஞானத் துறையின் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்