கேள்வி நேரம் 19: குடியரசும் அறியப்படாத பின்னணியும்

By ஆதி வள்ளியப்பன்

1. இந்தியாவுக்கான புதிய அரசியல் சாசனம் 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் (Constituent Assembly) சமர்ப்பிக்கப்பட்டது. அது 1950 ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்ததை ஒட்டி அதுவரை ‘டொமினியன் (இங்கிலாந்து ஆட்சிக்கு உட்பட்ட) ஆஃப் இந்தியா’ என்றழைக்கப்பட்டு வந்தது, குடியரசு நாடானது. புதிய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தும் நாளாகவும், இந்தியா குடியரசு ஆன நாளாகவும் ஏன் ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது?

 

2. இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் கொடியேற்றுவார். குடியரசு நாளில் இந்தியா கேட்டில் தொடங்கும் ராணுவ அணிவகுப்பு செங்கோட்டையில் முடிவடையும். குடியரசு நாளில் முப்படைகளின் ‘கமாண்டர் இன் சீஃப்’ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார், பிறகு அவரே கொடியேற்றுவார். கமாண்டர் இன் சீஃப் யார்?

21CH_NehruQuiz1

3. 1950-ல் இந்தியா குடியரசு நாடாவதற்கு முன்புவரை இந்தியாவின் முதல் குடிமகனாகக் கருதப்பட்டவர் கவர்னர் ஜெனரல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த இந்த நடைமுறை குடியரசு நாடாவதற்கு முன்புவரை தொடர்ந்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு இந்திய வைஸ்ராய் பதவி கைவிடப்பட்டாலும் நான்காம் ஜார்ஜ் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் பதவி தொடர்ந்தது. நாட்டு விடுதலைக்குப் முன்பு கடைசியாகவும் விடுதலைக்குப் பின் முதலாகவும் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

 

4. இந்தியாவுக்கு விடுதலை அளிப்பதற்கான இந்திய விடுதலைச் சட்டம் 1947-ல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிரிட்டன் அரசர்-அரசி ஒப்புதல் வழங்கி, ஒரு மாதம் கழித்தே முறைப்படி விடுதலை அளிக்கப்பட்டது. அவர்கள் என்றைக்கு ஒப்புதல் வழங்கினார்கள்?

 

5. இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேநேரம், அது நடைமுறைக்கு வருவதற்கு முன் எந்த சாசனத்தின் அடிப்படையில் இந்தியாவில் அரசாட்சி நடைபெற்று வந்தது?

 

6. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் கூட்டம் 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 166 நாட்களுக்குக் கூடியது. பல்வேறு திருத்தங்கள், கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உருவாக்கப்பட்ட இரண்டு ஆவணங்களில் 308 உறுப்பினர்கள் இரண்டு கையெழுத்துகளை இட்டார்கள். இது 1950 ஜனவரி 24-ம் தேதி நடைபெற்றது. உறுப்பினர்கள் ஏன் இரண்டு முறை கையெழுத்திட்டார்கள்?

 

7. குடியரசு நாள் அணிவகுப்பும் கொடியேற்றுதலும் எப்போதுமே செங்கோட்டையில்தான் நடைபெறுகிறது என்று நினைக்கிறோம். இந்த நடைமுறை 1955-க்குப் பின்பே தொடங்கியது. அதற்கு முன்பு வேறு இரண்டு இடங்களில் கொடியேற்றுதல் நடைபெற்று இருக்கிறது. அந்த இடங்கள் என்னென்ன?

8. முரசறைவிப்பதை பின்வாங்குதல் (Beating Retreat) என்பது 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டன் ராணுவச் சடங்கு. ரோந்து செல்லும் படைகளை கோட்டைக்குத் திரும்ப அழைப்பதாக இந்தச் சடங்கு இருந்தது. இதேபோன்று ஜனவரி 26 குடியரசு நாளில் ஏற்றப்படும் கொடி மீண்டும் இறக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் இந்திய தரைப்படை, கடல்படை, விமானப்படை என முப்படைகளின் இசைக்குழுக்கள் பங்கேற்கும். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள் எது?

 

9. குடியரசு நாளுக்கு வெளிநாட்டு விருந்தினர்கள் அழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அழைக்கப்பட்ட முதல் பெண் தலைவர் யார்? நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ல்தான் இது நடைபெற்றது.

 

10. 1950 முதல் குடியரசு நாளில் முதல் வெளிநாட்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் இந்தோனேசிய அதிபர் சுகர்னோ. இந்திய குடிரயசு நாளுக்கு மிக அதிக முறை வெளிநாட்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட அதிபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்