கேட்டாரே ஒரு கேள்வி
“The factory is manned by fully trained persons’’ என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். Man என்பதை verb ஆகப் பயன்படுத்தலாமா?
*********
‘’பரிவர்த்தனையைக் குறிக்க transaction என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். இதை trans, action என்று பிரிக்கலாமா?’’
Trans, action ஆகிய இரண்டு பகுதிகள் கொண்டதுதான் transaction. Trans என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் across என்ற பொருள் உண்டு.
Transport என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். Port என்றால் ஒன்றைச் சுமந்து செல்வது என்று பொருள் (Noun ஆகப்பயன்படும்போது அது துறைமுகத்தைக் குறிக்கிறது). Trans என்ற பகுதியின் பொருளோடு இதைச் சேர்த்துப் பார்க்கும்போது transport என்பதன் விளக்கம் புரிகிறதல்லவா?
Gress என்றால் செல்வது அல்லது தாண்டுவது என்று பொருள். Transgress என்றால் ஏதோ ஒரு எல்லையையோ, சட்டத்தையோ மீறுவது என்று அர்த்தம்.
Transaction என்றால் ஏதோ ஒரு action (செயல்பாடு) across நடைபெறுகிறது என்று பொருள்.
நண்பரே, போட்டிக்கான விதையை உங்கள் கேள்வி மூலம் விதைத்ததற்கு நன்றி.
கீழே 24 வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டிரண்டு வார்த்தைகளின் ஆங்கில அர்த்தங்களைச் சேர்த்தால் அது ஒரு புதிய ஆங்கில வார்த்தையாக உருவெடுக்கும். இப்படி 12 ஆங்கில வார்த்தைகளையும் கண்டுபிடியுங்கள்.
எடுத்துக் காட்டு ஒன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவிலேயே உங்கள் விடைகளை எழுதி அனுப்புங்கள்.
‘’6-Bar 1-Gain BARGAIN’’
1.லாபம்
2.விளம்பரம் என்பதன் சுருக்கம்
3.வலை
4.எறும்பு
5.உரிமையாளர்
6.மதுவகம்
7.பாணி
8.துறைமுகம்
9.வீடு
10.தாற்காலிகமாக
11.குல்லாய்
12.ஒன்றுக்கு ஆதரவான
13.ஒளி
14.எப்படி
15.அளவு
16.கப்பல்
17.வெற்றி
18.தேர்ந்தெடுத்தல்
19.வேலை
20.குழாய்கள்
21.இறக்குமதி
22.எப்போதும்
23.ஒருவரைத் தவறாக நம்ப வைத்துப் பணத்தைக் களவாடும் முயற்சி.
24.வாழ்க்கை
உங்கள் விடைகள் நான்கு நாட்களுக்குள் எங்களுக்கு வந்து சேரவேண்டும். உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயரை மறக்காமல் எழுதுங்கள்.
*********
கோட் சூட் என்று சொல்வதுண்டே, இதில் சூட் என்பதன் அர்த்தம் என்ன?
இங்கே நீங்கள் குறிப்பிடுவது suit. ஜாக்கெட், பேண்ட் ஆகிய இரண்டும் இணைந்து suit என்கிறார்கள். இவை இரண்டுமே ஒரேவிதமான நூலிழையால் நெய்யப்பட்டவையாக இருக்கும். இரண்டையும் சேர்த்துத்தான் அணிய வேண்டி இருக்கும். சூட்டிற்கு மேற்பகுதியில் கோட் அணிந்து கொள்வதுண்டு.
Suite என்பது உயர்தர ஹோட்டல்களில் வாடகைக்கு விடப்படும் இடம். ஒரு குடும்பமே தங்குமளவுக்கு பலவித அறைகள் கொண்டதாக இது இருக்கும்.
மற்றபடி suit என்பது verb ஆகப் பயன்படும்போது ஏற்றுக் கொள்ளத்தக்க என்று பொருள்படும். What time would suit you? You may arrive at a suitable time. This house has two rooms. If it suits, you can occupy them.
1jpg100
‘கேட்டாரே ஒரு கேள்வியை’ எழுப்பிய நண்பருக்கு ‘பயன்படுத்தலாம்’ என்பதுதான் பதில். பணிபுரிவது, இயக்குவது போன்ற அர்த்தங்களில் man என்பது verb ஆகப் பயன்படுகிறது. The firemen manned the pumps. While manning a security post, they were attacked. Only one of the two class rooms was manned due to staff shortage.
ஆனால் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் குறிப்பிட்டவர்கள் ஆணாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை.
எனவே இப்போதெல்லாம் ஆணையோ, பெண்ணையோ குறிக்காத (sex-neutral) வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதான் நாகரிகமாகக் கருதப்படுகிறது.
Foreman என்றால் Supervisor என்று பொதுவான வார்த்தையில் குறிக்கலாம். Manhours என்பதை working hours என்று மாற்றலாம். Policeman அல்லது Policewoman என்றெல்லாம் எதற்கு? Police Officer அல்லது Police Constable என்பது போதுமே. Salesman, Salesgirl ஆகியவற்றிற்குப் பதிலாக Sales representative பொருத்தமானது. Workman என்பதை worker என்று குறிப்பிடுங்கள். தலைவர் பெண்ணாக இருக்கும்போது Chairwoman என்று அழைக்கலாம். சொல்லப்போனால் Chairman, Chairwoman இரண்டுமே அவசியமில்லை, Chairperson அல்லது Chair என்பது போதுமே எனும் வாதம் வலுத்து வருகிறது.
போட்டியில் கேட்டுவிட்டால்?
‘Centenary’ என்ற வார்த்தைக்குப் பொருள் எது?
a)a guard
b)a hundred years
c)hundred runs
d)hundredth anniversary
காவல்காரரைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை Sentry. Centenary அல்ல.
100 வருடங்களைக் குறிக்க century என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்களை எடுத்தால் அவர் century அடித்ததாகக் குறிப்பிடுகிறோம்.
ஆனால் century என்ற nounன் adjective வடிவம்தான் centenary. Centenary என்றால் நூற்றாண்டு விழா.
சிப்ஸ்
* Lovelorn person என்றால் காதல் வயப்பட்ட நபரா?
காதல் மறுக்கப்பட்டதால் பெரும் அதிருப்தி அடைந்த நபர்.
* Congenial என்றால் சுமுகமான என்று அர்த்தமா?
ஆம். “I need some congenial company’ என்று கூறினால் ஒத்த கருத்து தன்மீது கொண்டவர்கள் தேவை என்று பொருள்.
* Carrying coals to the Newcastle என்றால்?
கொல்லன்பட்டறையில் ஊசி விற்பது! அதாவது எங்கே ஒரு பொருள் மிக அதிகமாகக் கிடைக்குமோ அங்கு வேலை மெனக்கெட்டு அந்தப் பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதுபோல.
(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago