வியூகம் 09: நீதித் துறையிலும் முதனிலைத் தேர்வு!

By செல்வ புவியரசன்

து முதனிலைத் தேர்வுகளின் காலம். சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் குரூப் 1 தேர்வுகளிலும் மட்டுமே நடந்துவந்த முதனிலைத் தேர்வுகள் இப்போது குரூப் 2 தேர்வுகளுக்கும்கூட நடத்தப்படுகின்றன. நிர்வாகத் துறைப் பணிகளுக்கான தேர்வுகளைப் போலவே நீதிப் பணித் துறைகளுக்கான தேர்வுகளிலும் முதனிலைத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.

மாவட்ட நீதிபதிகள், நீதித் துறை நடுவர்கள், அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் முதனிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற முறை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதி பணித் துறைத் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், அத்தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் மையங்கள் முதனிலைத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.

நான்கு தாள்கள்

இதற்கு முன்பு அரசு உதவி வழக்கறிஞர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டன. எழுத்துத் தேர்வில் நான்கு தாள்களை எழுத வேண்டியிருந்தது. முதல் தாளில் குற்ற அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை எழுதுதல், ஆவணங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தல் ஆகிய திறன்கள் சோதிக்கப்பட்டன.

இரண்டாம் தாளானது, இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியதாக அமைந்திருந்தது. மூன்றாம் தாள், இந்திய அரசியல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தைப் பற்றியது. நான்காம் தாள், மத்திய-மாநில அரசுகள் இயற்றிய சிறப்புச் சட்டங்களைப் பற்றியதாக இருந்தது. நான்காம் தாளுக்காக மட்டுமே, ஏறக்குறைய 50 சட்டங்களைப் பற்றிய அறிமுகம் அவசியமாக இருந்தது. ஏறக்குறைய இதே முறையில்தான் நீதித் துறைப் பணிகளுக்கான தேர்வுத் தாள்களும் அமைந்திருந்தன.

கைகொடுக்குமா பழைய முறை?

இதற்கு முன் நடத்தப்பட்டுவந்த தேர்வுகள், பெரிதும் நீதிமன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. எனவே, வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே நீதித் துறைத் தேர்வுகளை எழுதுவது எளிதாக இருந்தது. இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலோடு, தேர்வுகளை எளிதில் அணுக முடிந்தது.

புதிய முறையில், முதனிலைத் தேர்வு சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். சட்டவியல், ஒப்பந்தச் சட்டம், தீங்கியல் சட்டம் என அடிப்படைச் சட்டக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டிருக்கும். இவை அனைத்துமே சட்டப் படிப்பின்போது பாடங்களாகப் படித்தவைதாம். என்றாலும், வழக்கறிஞராகப் பணியாற்றும்போது குறிப்பிட்ட சில சட்டங்களுக்கே முதன்மை கவனம் கொடுப்பதால், தேர்வுக்காகப் பழைய பாடங்களை மீண்டும் நினைவில்கொள்வது அவசியம்.

சட்டப் படிப்பில் படித்த பாடங்களை அப்ஜெக்டிவ் முறையிலான தேர்வில் எதிர்கொள்வது எப்படி என்பதுதான் இப்போது உள்ள சவால். முதனிலைத் தேர்வில் எத்தனை கேள்விகள், எந்தப் பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, வினாக்கள் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்குமா, முக்கிய தீர்ப்புகளைப் பற்றியும் கேட்கப்படுமா? அடிப்படையான சட்டக் கோட்பாடுகள் கேள்விகளாக வருமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

முதலாவதாக நடத்தப்படப்போகும் முதனிலைத் தேர்வுக்குப் பிறகுதான் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்கும். ஆனால், அதற்கு முன்பே முதனிலைத் தேர்வு எந்த வகையில் அமைந்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு வருங்கால நீதிபதிகள் தயாராகிவிட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்