சேதி தெரியுமா? - உலகளாவிய இணைய வெளி மாநாடு

By கனி

டெல்லியில் நடைபெறும் 5-வது உலகளாவிய இணையவெளி மாநாட்டை (Global Conference on Cyber Space) பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 24 அன்று தொடங்கிவைத்தார். இந்த ஆண்டு, முதன்முறையாக இணைய வெளி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் கருப்பொருள், ‘எல்லோருக்குமான இணையம்: பாதுகாப்பையும் நிலையான வளர்ச்சியையும் உள்ளடக்கிய இணைய வெளி’ . தேசிய இணைய ஆளுகைப் பிரிவு (National e-Governance Division) இதை ஒருங்கிணைத்திருக்கிறது. 124 நாடுகளைச் சேர்ந்த 2,000 பிரதிநிதிகளும் 31 நாடுகளைச் சேர்ந்த 33 அமைச்சகப் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

 

வட கிழக்கு வளர்ச்சிக்கான முதல் மாநாடு

28CHGOW_NORTHEAST_SUMMIT100 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான முதல் மாநாட்டைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிப்பூரில் நவம்பர் 21 அன்று தொடங்கிவைத்தார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற மாநாட்டை டெல்லியைச் சேர்ந்த ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு மத்திய அரசு, மணிப்பூர் மாநில அரசுடன் இணைந்து ஒருங்கிணைத்தது. வடகிழக்கு மாநிலங்களின் வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. வடகிழக்கு இந்திய மாநிலங்களின் உள்கட்டமைப்பு, சுற்றுலா, போக்குவரத்து, திறன் மேம்பாடு, தொழில் முனைவு வளர்ச்சி போன்றவற்றுக்கு இந்த மாநாட்டில் கவனம் அளிக்கப்பட்டது.

 

ob8e40da_colதிறமைத் தரவரிசையில் 51-வது இடம்

சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (IMD) நடத்திய 2017 ஆண்டுக்கான உலகத் திறமை தரவரிசை பட்டியலில் கலந்துகொண்ட 63 நாடுகளில் இந்தியா 51-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதலீடு, வளர்ச்சி, தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்தத் தரவரிசைப் பட்டியல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திறமைத் தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும் டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா, பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஜெர்மனி, சுவீடன், லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகள் அதற்கு அடுத்த பத்து இடங்களையும் பிடித்திருக்கின்றன.

திறமைக்கான தரவரிசைப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் இருக்கின்றன. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூர், ஹாங் காங், தைவான் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

 

புலிகளைக் கணக்கெடுக்கும் செயல்

இந்தியாவில் புலிகளைக் கணக்கெடுப்பதற்காக டேராடூனில் இயங்கும் இந்தியக் காட்டுயிர் நிறுவனம் ( Wildlife Institute of India) ‘எம்-ஸ்ட்ரைப்ஸ்’ (M-STRiPES) என்ற செயலியை உருவாக்கி இருக்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி முதன்முறையாக நான்காவது அனைத்திந்தியப் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. இந்தச் செயலி, ஏற்கெனவே சில தேசியப் புலிகள் சரணாலயத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. மற்றச் சரணாலயங்களுக்கும் இந்தச் செயலியைப் பொறுத்துவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது இந்தியக் காட்டுயிர் நிறுவனம். இதுவரை, கள ஆய்வுகளின் வழியாக மனிதர்களால் செய்யப்பட்டுவந்த புலிகள் கணக்கெடுப்பு தற்போது செயலியால் செய்யப்படவிருக் கிறது. இதன்மூலம் மனிதத் தவறுகள் இல்லாமல் துல்லியமான புலிகள் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ளமுடியும். தேசியப் புலிகள் கணக்கெடுப்பு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

28CHGOW_TIGER_APP100

2018: சர்வதேச தானிய ஆண்டாக அறிவிப்பு?

2018-ம் ஆண்டை சர்வதேச தானிய ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நாவிடம் இந்தியா கோரிக்கை வைத்திருக்கிறது. மத்திய விவசாய துறை அமைச்சர் ராதா மோகன் சிங், இந்தியாவின் இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஐ.நா. பொது செயலாளரர் அன்டோனியோ குட்டரெஸ்க்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தில், தானியங்களைப் பற்றிய விழிப்புணர்வை வாடிக்கையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில், ஆராய்ச்சி, வளர்ச்சி, துறையினரிடம் ஏற்படுத்த வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தியிருக்கிறார். சோளம், தினை, ராகி போன்ற தானியங்கள் இந்தியாவில் பிரபலமாக இருக்கின்றன. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை சர்வதேச அளவில் ஏற்படுத்துவதால் விவசாயிகளும் மக்களும் பயனடைவார்கள் என்று இந்திய தரப்பில் ஐ.நா விடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

அரசின் சேவைகளைப் பெறுவதற்குச் செயலி

28chgow_umang app100 

மத்திய, மாநில அரசுகளின் சேவைகளைப் பெறுவதற்காக ‘UMANG’ என்ற செயலியை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 23 அன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்தச் செயலியைப் பயன்படுத்தி பயனாளிகள், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சிபிஎஸ்சி, ‘பாரத் பில் பே’ போன்ற அமைப்புகளின் சேவைகளைப் பெற முடியும். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், தேசிய இணைய ஆளுகைப் பிரிவுடன் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கியிருக்கிறது. இந்த ‘UMANG’ செயலியைப் பயன்படுத்தி நான்கு மாநிலங்களில் இருக்கும் 33 மத்திய, மாநில, அரசு துறைகளின் 162 சேவைகளைப் பெறமுடியும். இந்தச் செயலி தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, உருது, குஜராத்தி உள்ளிட்ட 13 மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

சுபாங்கி ஸ்வரூப்: இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி

28CHGOW_SUBANGI100 

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் நவம்பர் 23 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். கடல்சார் உளவு விமானப்பிரிவில் அவர் விரைவில் இணையவிருக்கிறார். ஹைதரபாத்தில் இருக்கும் துண்டிகல் விமானப் படைப்பிரிவில் சுபாங்கி பயிற்சிபெறவிருக்கிறார். சுபாங்கியுடன் டெல்லியைச் சேர்ந்த ஆஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா ஆகியவர்கள் நாட்டின் முதல் கடற்படையின் ஆயுத சோதனைப் பிரிவு பெண் அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

தல்வீர் பண்டாரி: சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி

ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றத்தின் (International Court of Justice) நீதிபதி தேர்வுக்காக நடத்தப்பட்ட மறுதேர்தலில் தல்வீர் பண்டாரி ஐந்தாவதும் கடைசி இருக்கைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிரிட்டன் தன்னுடைய வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை இந்தத் தேர்தலில் இருந்து விலக்கிக்கொண்டதால், இந்தியா சார்பில் போட்டியிட்ட தல்வீர் பண்டாரி வெற்றிபெற்றிருக்கிறார்.

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் அனைத்து 15 வாக்குகளையும், ஐ.நா பொதுக் குழுவின் 193 வாக்குகளில் 183 வாக்குகளையும் பெற்று இந்தத் தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் 9 ஆண்டுகள் பணிகாலத்துடன் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த நீதிமன்றத்தில் ஆப்ரிக்கா(3), ஆசியா (3), மேற்கு ஐரோப்பா(5), கிழக்கு ஐரோப்பா (2) லத்தின் அமெரிக்கா, கரீபியா (2) ஆகிய பகுதிகளில் இருந்து நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்