1. பொதுவாகப் பறவைகளுக்கு கண் இமைகள் இருக்காது, ஒரேயொரு பறவையைத் தவிர. கண் இமைகளைக் கொண்ட அந்தப் பறவை தமிழகத்திலும் வாழ்கிறது. அது எந்தப் பறவை?
2. யானைகள் குடும்பமாக வசிக்கின்றன. அம்மா, அம்மாவின் சகோதரி, குட்டிகள் போன்றவை கூட்டமாக வாழ்கின்றன. முதிர்ந்த பெண் யானை கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும். வளர்ந்த ஆண் யானைகள் கூட்டத்தோடு சேர்ந்திருப்பதில்லை. சரி, தந்தங்கள் அற்ற ஆண் யானைகளின் பெயர் என்ன?
3. பறவையைப் போல தரையில் கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பாம்பு வகை தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் இருக்கிறது. அந்தப் பாம்பு எது?
4. எறும்புகள், கரையான் போன்ற சிறு பூச்சிகளை முதன்மை உணவாக உண்டு வாழ்வதற்கு ஏற்ற வகையிலான வாயுடன் இருக்கும் பாலூட்டி எறும்புத்தின்னி என்று தவறாக அழைக்கப்படுகிறது. தமிழக கிராமங்களில் இது எப்படி அழைக்கப்படுகிறது?
5. உலகிலுள்ள தாவரங்களிலேயே மிகப் பெரிய அளவில் கூட்டாகப் பூக்கும் பூக்களைக் கொண்ட தாவரம் இந்தியா, இலங்கையைத் தாயகமாகக் கொண்டது. அந்தத் தாவரம் எது?
6. கொரில்லா, சிம்பான்சி, ஒராங்ஊத்தன் என உலகில் பல்வேறு வாலில்லா குரங்கு வகைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லா குரங்கு வகை எது, அது எந்தப் பகுதியில் காணப்படுகிறது?
7. இந்தியாவில் கரியால், மக்கர், உப்புநீர் முதலை ஆகிய மூன்று வகை முதலைகள் உள்ளன. தமிழகத்தில் சதுப்புநில முதலை காணப்படுகிறது. மேற்கண்ட மூன்று முதலை வகைகளும் காணப்படும் இந்திய மாநிலம் எது?
8. மதம் சார்ந்தும் மதம் சாராமலும் அமைதியின் குறியீடாக பல்வேறு உயிரினங்கள் கருதப்பட்டு வந்துள்ளன. புத்த மதத்தில் அமைதியின் குறியீடாகக் கருதப்படும் பறவையின் பெயர் என்ன?
9. உலகிலுள்ள தேசியப் பூங்காக்களில் ஒன்று மட்டுமே முழுக்க முழுக்க ஏரியில் மிதக்கும் தாவரத் தீவுகளைக்கொண்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் அந்த தேசியப் பூங்காவின் பெயர் என்ன?
10. உலகில் இன்றைக்குப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ள பூச்சியினம் தேனீ. தேனீக்கள் இல்லையென்றால் தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை செய்து இனப்பெருக்கம் செய்வது குறையும். ஒரேயொரு கண்டத்தைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் தேனீ காணப்படுகிறது. தேனீ இல்லாத அந்தக் கண்டம் எது?
விடைகள்
1. இருவாச்சி
2. 'மக்னா' அல்லது 'மோழை'
3. கருநாகம் (King Cobra)
4. அலங்கு
5. தாழிப்பனை
6. ஹூலாக் கிப்பன், வடகிழக்கு மாநிலங்கள்
7. ஒடிசா
8. மயில்
9. லோக்தக் ஏரி, மணிப்பூர்
10. அண்டார்டிகா, அங்கு தாவரங்களோ, பூக்களோ
இல்லாததும் தட்பவெப்ப நிலையுமே காரணம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago