மீண்டும் சர்ச்சைக்குள்ளான மன்கட் அவுட் விவகாரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளது மன்கட் ரன் அவுட் முறை. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி ஒரு நாள்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளிடையிலான 3-வது மற்றும் கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில்முதலில் விளையாடிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி43.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இங்கிலாந்து பேட்டிங்கின்போது 36 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே அந்த அணியின் கைவசம் இருந்தது. அப்போது பிரேயா டேவிஸும், சார்லோட் டீனும் களத்தில் இருந்தனர். இந்தியாவின் தீப்தி சர்மா ஆட்டத்தின் 44-வது ஓவரை வீசும்போது அதை டேவிஸ் எதிர்கொண்டார். நான்-ஸ்டிரைக்கர் முனையில் சார்லோட் டீன் இருந்தார். 44-வது ஓவரின் 3-வது பந்தை தீப்தி சர்மா வீச வந்தபோது சார்லோட் டீன், கிரீஸில் இருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து அவரை தீப்தி சர்மா, மன்கட்அவுட் முறையில் ரன் அவுட் செய்துவிட்டார். இதற்கு நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றது. எதிர்பாராத இந்த ரன்-அவுட்டால் சார்லோட் டீன், கண்ணீர் விட்டவாறே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தது தவறு என்று கிரிக்கெட் விமர்சகர்கள் சிலரும், இது ஐசிசி கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று சிலரும் வாதிட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் ஒருமுறை சர்ச்சை எழுந்தது. 1990-களில் தென் ஆப்பிரிக்கஅணி வீரர் பீட்டர் கிர்ஸ்டனை, இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்மன்கட் அவுட் முறையில் ரன் அவுட்டாக்கினார். அதைப் போல 2019 ஐபிஎல் போட்டியின்போது ஜாஸ் பட்லரை, அஸ்வின்ரவிச்சந்திரன் மன்கட் அவுட் முறையில் ரன் அவுட்டாக்கினார். இது அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தற்போது மீண்டும் மன்கட் அவுட் முறை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தீப்தி சர்மா செய்தது சரியல்ல என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறும்போது, “மன்கட் அவுட் குறித்த விவாதம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இருபுறமும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இப்படி ஒரு ஒரு ரன் அவுட் மூலம்தான் அந்த அணி வெற்றி பெற வேண்டுமா?" என்றார்.

இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் கூறும்போது, “கிரிக்கெட்டை விளையாடும் எந்த ஒரு நபரும் இப்படி ஒரு செயலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது கிரிக்கெட்டே கிடையாது” என்றார். அதே நேரத்தில் மற்றொரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “எதிர் திசையில் இருக்கும் வீரர்கள் பந்தை வீசும் போது கிரீஸ் உள்ளே வீராங்கனைகள் நிற்க அவ்வளவு கஷ்டமா என்ன?. தீப்தி சர்மா செய்தது சரியே” என்று பதிவிட்டுள்ளார்.

மன்கட் அவுட் என்றால் என்ன? - இந்த மன்கட் அவுட் முறை உருவான கதை சுவாரஸ்யமானது. 1947-ல் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய பவுலர் வினு மன்கட், ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுனை இதே பாணியில் ரன் அவுட் செய்தார். அதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இதே பில் பிரவுனை, மன்கட் இப்படி ரன் அவுட் செய்தார். இதையடுத்து விளையாட்டின் மாண்பை மன்கட் நாசம் செய்துவிட்டார் என்று அப்போது ஊடகங்கள் அவருக்கு எதிராக விமர்சனம் செய்தன. ஆனால், இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன், வினு மன்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பிறகு இந்த ரன் அவுட் முறை, வினு மன்கட் பெயரிலேயே, மன்கட் அவுட் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்