பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் சபலெங்கா

By செய்திப்பிரிவு

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஸ்பெயினின் ராபர்டோ கார்பால்ஸூடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் இத்தாலியின் பேபியோ போக்னி 6-4, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் ஹூப்லரையும், ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர் 6-3, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவையும் வீழ்த்தினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் கமிலாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜெசிகா பெகுலா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் காயம் காரணமாக கமிலா வெளியேறினார். இதனால் ஜெசிகா பெகுலா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 5-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கரோலின் கார்சியா 6-4, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா பிளின்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2-ம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 7-5, 2-6 என்ற செட் கணக்கில் 214-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் இரினா ஷைமனோவிச்சை தோற்கடித்து 3-வது சுற்றில் நுழைந்தார். 9-ம் நிலை வீராங்கனையான தரியா கஸட்கினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா வை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்