டென்னிசின் ஆகச்சிறந்த வீரர்களுக்கிடையேயான இறுதிப் போட்டியில் நடாலை 6-4, 6-3 என்று நேர் செட்களில் ரபேல் நடாலை வீழ்த்தி சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார்.
இதன் மூலம் மற்றொரு டென்னிஸ் மேதை இவான் லெண்டில் சாதனையான 94 சாம்பியன் பட்டங்கள் என்ற சாதனையை பெடரர் சமன் செய்தார்.
முதல் செட்டில் நடால் சர்வை பெடரர் பிரேக் செய்தவுடன் பெடரர் ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது. பிறகு தன் சர்வையும் வென்று 2-0 என்று முன்னிலை வகித்த பெடரரின் முழுத்திறமையும் இன்று கைகொடுத்தது, நடாலின் ஷாட்களும் அபாரமாக அமைந்தது.
முதல் செட்டில் இரண்டு சக்திவாய்ந்த ஏஸ் சர்வ் மூலம் 4-2 என்று பெடரர் முன்னிலை வகித்தார். நடாலும் ஒரு ஏஸ் அடித்து இடைவெளியை 4-3 என்று குறைத்தார். நடால் இதுவரை ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுவான் மார்ட்டின் டெல் போட்ரோவுக்கு எதிராக அரையிறுதியில் 3 செட்கள் ஆடிய பெடரர் களைப்பாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சர்வ் கேமை வென்று பெடரர் 5-3 என்று முன்னிலை பெற்று களைப்படையவில்லை என்பதைக் காட்டினார். நடால் மீண்டும் ஒரு ஏஸுடன் 5-4 என்று இடைவெளியைக் குறைத்தாலும் கடைசி சர்வ் கேமில் பெடரர் தனது 7வது ஏஸ் சர்வை அடித்து 6-4 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் பிரமாதமாக எதுவும் நடக்கவில்லை, 5-வது சர்வ் கேமில் நடால் முதல் பிரேக் வாய்ப்பை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றினார், ஆனால் இன்னொரு பிரேக் வாய்ப்பைக் காப்பாற்ற முடியவில்லை, பெடரர் பிரேக் செய்தார், பிறகு 6-3 என்று கைப்பற்றி ஷாங்காய் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago