ஐபிஎல் 2023 டி20 தொடர் பரபரப்புகளும் பளபளப்பும் முடிந்து உண்மையான கிரிக்கெட் ஆட்டம் தொடங்கவுள்ளது. முதலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவலில் ஜூன் 7-ம் தேதி தொடங்குகின்றது. இதில் பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரையுமே சேர்க்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
கே.எஸ்.பரத்தை விட இஷான் கிஷன்தான் வலிமையானவர் என்கிறார் ரிக்கி பாண்டிங். அதேபோல் ஓவல் மைதானம் 5 நாள் கிரிக்கெட்டில் ஒரு சமயத்திற்கு மேல் ஸ்பின் எடுக்கு என்பதால் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் இருவரையுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங். மேலும் ஜடேஜா 6-ம் நிலையில் இறங்கினால் சூர்யகுமார் யாதவ் அதற்கு முந்தைய டவுனில் இறங்கினால் நல்லது என்கிறார் பாண்டிங்.
“நான் இந்திய அணித் தேர்வாளராக இருந்தால், இந்த இறுதிப் போட்டியின் முக்கியத்துவம் கருதி, டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முக்கியத்துவம் கருதி இஷான் கிஷனை அணியில் சேர்ப்பேன். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான ஒரு திடீர் திருப்புமுனையாக, திடீர் காரணியாக, எதிர்பாரா காரணியாக இஷான் கிஷன் இருக்கக் கூடும். ரிஷப் பண்ட் ஃபிட் என்றால் அவர்தான் ஆட வேண்டும். ஆனால் அது சாத்தியமாகாத போது ரிஷப் பண்ட் போன்ற ஒரு எதிர்பாராத்தன்மை கொண்ட இஷான் கிஷனுடன் தான் நான் செல்வேன்.
பரத்தை நான் ஏதோ குறைவாக எடைபோடுகிறேன் என்பதல்ல, ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் இஷான் கிஷன் சரியான பதிலீடாக இருப்பார் என்று கருதுகிறேன். விக்கெட் கீப்பிங்கும் நன்றாகச் செய்கிறார். அவரது பேட்டிங் ஸ்டைல் ரன் ரேட்டை உயர்த்தும் விதமாக உள்ளது. இவர் மட்டுமல்ல சூரியகுமார் யாதவ்விடமும் எதிர்பாரா திடீர் தன்மை ஒன்று உண்டு என்பதால் அவரையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
» தோனியின் ஆனந்தக் கண்ணீர்... - ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே அணியினரின் உணர்ச்சி மிகு தருணங்கள்!
ஆஸ்திரேலியாவை கவிழ்க்க வேண்டுமெனில் நிறைய இது போன்ற திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வீரர்கள் அவசியம். ரஹானே ஐபிஎல் தொடரில் அருமையாக ஆடினார். அவர் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்திருப்பது கண்டு மகிழ்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக ரஹானே ஆடவில்லை. ஆனால் இப்போது பாருங்கள் எப்படி தன்னம்பிக்கையுடன் அவர் ஆடி அணிக்குள் நுழைந்திருக்கிறார் என்பதை.
அவர் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடினால் இதைச் செய்திருக்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் உண்மையில் நன்றாக ஆடி மேலே வருவது அவரைப்பொறுத்தவரை பெரிய தடையாகவே இருந்திருக்கும் அவரது போக்கின் படி அவர் நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவே விரும்புவார். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவலில் ரன்கள் எடுக்கத் தொடங்கினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ரஹானே ஒரு தரமான வீரர், அவருடைய தலைமைப் பண்புகளையும் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் பார்த்தோம்.
ஜடேஜா 6ம் நிலையில் இறக்கப்படுவார், அவர் பேட்டிங், பவுலிங் இரண்டுமே முன்னேறியுள்ளது. ஆனால் அஸ்வின் தான் டெஸ்ட்டில் உண்மையிலேயே திறமையான பவுலர். ஜடேஜா பேட்டிங்கில் கொஞ்சம் ஆடி, 4-5ம் நாளில் ஸ்பின் எடுத்தால் சப்போர்ட் ஸ்பின்னராக ஜடேஜா ஒரு சிறந்த தெரிவுதான். சூர்யகுமார் யாதவ் ஜடேஜாவுக்கு முன்பாக இறங்க வேண்டும்” என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஆனால், பாண்டிங் கூறுவது போல் பிட்ச் இருக்காது என்று நம்பலாம். நிச்சயம் ஒரு கிரீன் டாப் பிட்சைத்தான் போடுவார்கள் என்பதுதான் செய்தியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago