டி20-ல் அரிதான சாதனை | கெய்ரன் போலார்டுக்கு அடுத்து தோனிதான்!

By ஆர்.முத்துக்குமார்

இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில், சிஎஸ்கே கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, டி20 கிரிக்கெட்டில் 300 வீரர்களை ஆட்டமிழக்கச் (கேட்சுகள் மற்றும் ஸ்டம்பிங்) செய்து டி20 கிரிக்கெட்டில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வகையில் கெய்ரன் போலார்டுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

இதனை தோனியின் முச்சதம் என்று வர்ணிக்கலாம். இந்த ஐபிஎல் தொடரின் பேட்டிங் சூப்பர் ஸ்டார் ஷுப்மன் கில்லை தோனி பிளாஷ் ஸ்டம்பிங் செய்த போது 301 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். இதில் 214 வீரர்களை கேட்ச் மூலமாகவும் 87 வீரர்களை ஸ்டம்பிங் செய்தும் வெளியேற்றி சாதனை புரிந்துள்ளார். கில்லை ஸ்டம்பிங் செய்ததோடு சக விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவை வெளியேற்ற கேட்சையும் பிடித்தார் தோனி.

இந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பது கெய்ரன் பொலார்ட். மும்பை இந்தியன்ஸின் முன்னாள் ஆல்ரவுண்டர் டி20 கிரிக்கெட்டில் 345 கேட்ச்களை எடுத்து ஆகச்சிறந்த பீல்டராகத் திகழ்கிறார்.

இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும், ஆர்சிபி அணி விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 276 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 207 கேட்ச்கல் 69 ஸ்டம்பிங்குகள் அடங்கும்.

தென் ஆப்பிரிக்கா அதிரடி இடது கை வீரர் டேவிட் மில்லர் டி20 கிரிக்கெட்டில் 274 கேட்ச்கள் எடுத்துள்ளார். முன்னாள் சிஎஸ்கே ஆல்ரவுண்டரும், இப்போதைய பவுலிங் கோச்சுமான டிவைன் பிராவோ டி20-யில் 261 கேட்ச்களை எடுத்துள்ளார்.

நேற்றைய இறுதிப் போட்டியில் ஜடேஜாவின் கடைசி கட்ட அதிரடியினால் சிஎஸ்கே 2023 ஐபிஎல் கோப்பையை வென்றது. இது 5ம் முறையாகும். ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு கேப்பை வென்ற இளம் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா வீசிய அந்தப் பந்தை அவர் பின்னால் சென்று ஆடியிருக்க வேண்டும், மாறாக காலை நீட்டி ஆடித் தவறு செய்தார், பந்து லேசாகத் திரும்ப தோனி பிளாஷ் ஸ்டம்பிங் செய்து கில்லை வெளியேற்றினார். மேலும் முன்னால் வந்து ஆடினாலும் ஷுப்மன் கில்லின் முன் கால் பந்து பிட்ச் ஆகும் இடத்தை தொடவில்லை அப்படித் தொட்டிருந்தால் மட்டையில் சிக்கியிருக்கும். இந்த ஸ்டம்பிங் வாய்ப்பும் கிடைத்திருக்காது. ஆகவே பின்னால் சென்று ஆட வேண்டிய பந்தை முன்னால் சென்று ஆடியும் அப்படி ஆட முடிவெடுத்தாலும் பிட்ச் ஆஃப் த பாலுக்குச் செல்லாமல் பந்துக்கும் மட்டைக்கும் இடைவெளி கொடுத்தும் ஆடியதால் பீட்டன் ஆகி ஸ்டம்ப்டு ஆனார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்