9 நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் போட்டி லீக்: ஐசிசி ஒப்புதல்

By ராய்ட்டர்ஸ்

9 நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டி லீக் ஆகியவற்றுக்கு ஐசிசி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அதாவது டெஸ்ட் விளையாடும் இந்த 9 நாடுகளும் உள்நாட்டில் 3 டெஸ்ட் தொடர்களையும் அயல்நாட்டில் 3 தொடர்களையும் 2 ஆண்டுகள் காலக்கட்டத்தில் ஆடும் என்று ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

இதனை எப்படிக் கொண்டு செல்வது என்ற விவரங்களை வடிவமைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கூறிய டேவ் ரிச்சர்ட்சன், 2019 உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் என்றும் 2021 மத்தியில் இறுதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் என்றார்.

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடக்கத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கான் அணிகள் பங்கேற்காது என்றும் அவர் தெரிவித்தார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2 டெஸ்ட் கொண்ட தொடர்கள் முதல் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடராகவும் அமையும். இதில் டாப் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

அதே போல் 2021 முதல் 13 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் சர்வதேச லீக் அறிமுகம் செய்யப்படும். இதில் 2 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் அணிகள் முடிவு செய்யப்படும்.

அதேபோல் 4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கும் உறுப்பு நாட்டு வாரியங்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளன. டிசம்பர் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்கா முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாபவே அணியுடன் மோதுகிறது. இது சோதனை அடிப்படையில் நடத்தப்படுகிறது, இதன் மூலம் புதிய டெஸ்ட் அறிமுக அணிகளான அயர்லாந்து, ஆப்கான் ஆகிய அணிகள் விரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கு தங்களை வளர்த்தெடுத்துக் கொள்ள முடியும் என்று டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்