IPL Final | மழை காரணமாக 15 ஓவர்களாக குறைப்பு - சிஎஸ்கே வெற்றிபெற 171 ரன்கள் இலக்கு 

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்துள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.

20 பந்துகளில் 39 ரன்களுடன் வெளியேறினார் கில். 39 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்த விருதிமான் சாஹா விக்கெட்டை இழந்தார். 47 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 96 ரன்களை விளாசிய சாய் சுதர்ஷன் குஜராத் அணிக்கு கைகொடுத்தார். இதனால் 214 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பத்திரனா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. அதன்படி, 15 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE