மின்னல் மஹி | சுப்மன் கில்லை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றிய தோனி!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்து. அபார ஃபார்மில் உள்ள சுப்மன் கில்லை தனது பாணியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியுள்ளார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

இந்தப் போட்டியில் குஜராத் அணி முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் எடுத்தது. கில், 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரின் கடைசி பந்தை ஃபார்வேர்டு ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார் கில். அவரது இரண்டு கால்களும் கிரீசுக்கு வெளியில் இருந்தன. பந்தை பற்றியவுடன் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார் தோனி.

இந்தப் போட்டியின் 2-வது மற்றும் 5-வது ஓவரில் கில் மற்றும் சாஹா கேட்ச்சை தீபக் சாஹர் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் தோனியின் மின்னல் வேகா ஸ்டம்பிங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அது களத்திலும், சமூக வலைதளத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்