சென்னை: நடப்பு ஐபிஎல் சீசன் போட்டிகளை தொலைக்காட்சி வழியே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டிஜிட்டல் வழியே ஜியோ சினிமாவும் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் இதுவரை அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 5 போட்டிகள் எது எனப் பார்ப்போம்.
ஜியோ சினிமா தளத்தில் 4K ரெஸல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வயாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.
தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில் புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ, சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களுக்கும் இதில் இடம்பெற்றுள்ளது. இது அனைத்தும் பார்வையாளர்களை ஈர்த்தது.
நடப்பு சீசனில் ஜியோ சினிமாவில் அதிகம் பேர் பார்த்த டாப் 5 போட்டிகள்
இந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை அனைத்தையும் தகர்த்து முதல் இடத்தில் இன்றைய இறுதிப் போட்டி பிடிக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago