துபாய்: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசு தொகை விவரத்தை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கடந்த 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில் வழங்கப்பட்ட அதே பரிசு தொகைதான் தற்போதும் வழங்கப்படுகிறது. மொத்தம் 3.8 மில்லியன் டாலர்களுக்கு இந்த பரிசு தொகையானது பல்வேறு அணிகளுக்கு வழங்கப்படுகிறது.
வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் விளையாட உள்ளன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல தென் ஆப்பிரிக்க அணிக்கு ரூ.3.7 கோடி, இங்கிலாந்து அணிக்கு ரூ.2.89 கோடி, இலங்கை அணிக்கு ரூ.1.65 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த மூன்று அணிகளும் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்த அணிகளாகும்.
6, 7, 8 மற்றும் 9-வது இடங்களை பிடித்த அணிகளான நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிக்கு தலா ரூ.82 லட்சம் வழங்கப்பட உள்ளது.
» தமிழகத்தில் மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடக்கம்
» போன் எண்ணை மறைக்கும் வகையில் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago