மும்பை: தோனியை போல் ரோஹித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றில் கவாஸ்கர் பேசும்போது, “ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா குறைவாக மதிப்பிடப்படுகிறார். ரோஹித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. தோனியைப் போல் ரோஹித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறுகிறேன்.
ரோஹித் சர்மா லக்னோவுடனான போட்டியில் ஆகாஷ் மத்வாலை பயன்படுத்தியதன் மூலம்தோனி - பூரான் இருவரும் ஓரே ஓவரில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். ஆனால் ரோஹித்தின் இந்த முடிவுக்காக அவர் பரவலாக பாராட்டப்படவில்லை. இதையே தோனி சிஎஸ்கே அணிக்காக செய்திருந்தால் ‘தோனி சிறப்பாக திட்டம் போட்டார்’ என பலரும் பாராட்டி இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில், வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago