முன்னணி வீரர்களை கட்டுப்படுத்திய லக்னோவின் வேகப்பந்து வீச்சு - மும்பை 182 ரன்கள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்களை சேர்த்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேடர் போட்டியில் லக்னோ அணியும் மும்பை அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா இம்முறை சோபிக்காமல் 11 ரன்களிலேயே வெளியேறினார். இஷான் கிஷன் 15 ரன்களில் நடையைக் கட்ட அடுத்து பாட்னர்ஷிப் அமைத்த கேமரூன் கிரீன் - சூர்ய குமார் யாதவ் இணை லக்னோ பந்துவீச்சை விளாசித்தள்ளினர். இதன் எதிரொலியாக 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை 98 ரன்களைச் சேர்த்தது.

2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்த சூர்யகுமார் யாதவை நவீன் உல் ஹக் அவுட்டாக்க, தன்னுடைய பாட்னரை இழந்த சோகத்தில் கேமரூன் கிரீன் அதே ஓவரில் விக்கெட்டானார். அவர் 23 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்திருந்தார். அடுத்து ஒன்றிணைந்த திலக் வர்மா - டிம் டேவிட் இணை கடமைக்கு பொறுமையாக ஆடினர். ஆனால் அவர்களின் பொறுமையான ஆட்டத்துக்கு யாஷ் தாக்கூர் முற்றுப்புள்ளி வைக்க டிம் டேவிட் 13 ரன்களுடன் கிளம்பினார். அடுத்து திலக் வர்மா 26 ரன்களுடனும், கிறிஸ் ஜோடன் 4 ரன்னுடன் அவுட்டாக ஆட்டம் மந்தமானது. நேஹால் வதேரா கடைசி நேர நம்பிக்கையாக 2 சிக்சர்கள் விளாச கடைசி ஓவரில் அவுட்டானார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை 182 ரன்களை குவித்தது.

லக்னோ அணி தரப்பில், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், மோஹ்சின் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்