ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை - லக்னோ இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், கிருணல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் இந்த சீசனில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அணியின் பந்து வீச்சு ஆட்டத்துக்கு ஆட்டம் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தினாலும் அதிரடி பேட்டிங்கின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது மும்பை அணி. இது ஒருபுறம் இருந்தாலும் நடப்பு சாம்பியனான குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதால்தான் மும்பை இந்தியன்ஸால் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் பெங்களூருவிடம் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. இம்முறை வலுவான பந்து வீச்சு தாக்குதல், மிடில் ஆர்டர் பேட்டிங்கை லக்னோ அணி கொண்டுள்ளது.

குயிண்டன் டி காக், பிரேரக் மன்கட், கிருணல் பாண்டியா, ஸ்டாயினிஸ், பதோனி, நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், மோஹ்சின் கான், அவேஷ்கான், நவீன் உல்ஹக், அமித் மிஷ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருடன் கிருணல் பாண்டியாவும் சீரான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

மும்பை அணி இந்த சீசனில் பவர் ஹிட்டர்களையே பிரதானமாக நம்பி உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி சதம் விளாசியிருந்தார். இந்த சீசனில் 381 ரன்கள் சேர்த்துள்ள அவர், சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. ஒரு சதம், 4 அரை சதங்களுடன் 511 ரன்கள் வேட்டையாடி உள்ள சூர்யகுமார் யாதவ், 313 ரன்கள் சேர்த்துள்ள ரோஹித் சர்மா, 439 ரன்கள் குவித்துள்ள இஷான் கிஷன் ஆகியோர் லக்னோ அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சில் பியூஸ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. கடந்த சீசனில் இரு முறையும் தற்போது ஒரு முறையும் லீக் சுற்றில் மும்பை மண்ணில் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி கண்டுள்ளது. இருப்பினும் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்