ஒரு முறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத ஆர்சிபி: காரணம் என்ன?

By எல்லுச்சாமி கார்த்திக்

நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’. ஆனால், வழக்கம் போலவே இந்த முறையும் வெறுங்கையோடு வெளியேறி உள்ளது ஆர்சிபி. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 7-ல் தோல்வி என முதல் சுற்றோடு நடையை கட்டி உள்ளது. இந்த சூழலில் அந்த அணி ஒரு முறை கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை கோப்பையை நெருங்கிய ஆர்சிபி அணியால் அதனை வெல்ல முடியவில்லை. இந்த மூன்று சீசனிலும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு சீசனிலும் பிளே-ஆஃப் வாய்ப்பை கடைசி லீக் போட்டியில் இழந்த ஆர்சிபி வீரர்கள் கலங்கிய கண்களோடு விடைபெற்றனர். இறுதிப் போட்டி மட்டுமல்லாது 5 முறை அடுத்த சுற்றுக்கும் முன்னேறிய ஓர் அணி ஆர்சிபி.

பேட்டிங் மும்மூர்த்திகள்: ஒவ்வொரு ஐபிஎல் அணியும் சில வியூகத்தின் அடிப்படையில் அணியை கட்டமைப்பார்கள். ஆர்சிபி அணியின் அடிப்படை வியூகம் என்னவென்றால் பேட்டிங் மும்மூர்த்திகளை தலைமையில் அணியை கட்டமைப்பது. முன்பு கிறிஸ் கெயில் - விராட் கோலி - டிவில்லியர்ஸ் என இருந்த அணியின் கட்டமைப்பு தற்போது டூப்ளசி - கோலி - மேக்ஸ்வெல் என மாறியுள்ளது. மற்றபடி அனைத்தும் அப்படியே தான் உள்ளது. இந்த மும்மூர்த்திகளை நம்பியே அணி உள்ளது. யுவராஜ் சிங், வாட்சன் போன்ற வீரர்கள் ஆர்சிபி அணியில் இருந்த காலத்திலும் இதே நிலைதான்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பெரிய மற்றும் நட்சத்திர வீரர்களை நம்பி இருக்கும் அணி. இவர்கள் ஏதேனும் சில போட்டிகளில் ஒரு சேர சொதப்பினால் அனைத்தும் ‘கதம்.. கதம்’ ஆகி விடுகிறது. ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’ எனும் நடிகர் வடிவேலுவின் காமெடி போல ஆர்சிபி-யின் டாப் ஆர்டர் ஸ்ட்ராங்கு, பின்வரிசை படு வீக்கு என்றும் சொல்லலாம். அந்த அணி ஒரே போட்டியில் 263 ரன்களும் குவித்துள்ளது, 49 ரன்களில் சுருண்டு ஆல்-அவுட் ஆகியும் உள்ளது.

ஆயிரம் ரன்களை கடந்த ஆறே ஆர்சிபி வீரர்கள்: கடந்த 2008 முதல் நடப்பு சீசன் வரையில் கல்லிஸ், டூப்ளசி, மேக்ஸ்வெல், கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி என ஆறு வீரர்கள் மட்டுமே ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். இதில் மூவர் ஓய்வு பெற்று விட்டனர். மூவர் மட்டுமே தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே இந்தியர். இத்தனைக்கும் ஐபிஎல் அரங்கில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனை கொண்ட அணி ஆர்சிபி.

அதுவே மற்ற அணிகளை எடுத்துக் கொண்டால் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. சென்னை அணியில் சுமார் 12 பேட்ஸ்மேன்கள் ஆயிரம் ரன்களுக்கு மேல் கடந்துள்ளனர். அதில் 7 பேர் இந்தியர்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் 10 பேட்ஸ்மேன்கள் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதில் 7 இந்திய பேட்ஸ்மேன்கள் அடங்குவர்.

பவுலிங் யூனிட்: கையில் இருக்கும் மொத்த பணத்தையும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கே செலவு செய்தது போக எஞ்சியிருக்கும் தொகையை கொண்டே பவுலர்கள் உட்பட மற்றும் பல ரோல்களுக்கான வீரர்களை அணியில் சேர்க்கிறது ஆர்சிபி. பேட்டிங் யூனிட்டில் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் உள்நாட்டு வீரர்களையே பவுலிங் பிரிவில் நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மற்ற அணிகள் எல்லாம் கைதேர்ந்த வெளிநாட்டு பவுலர்களை டார்கெட் செய்ய ஆர்சிபி அதிகம் இந்திய பவுலர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டி உள்ளது.

ஆர்சிபி அணியின் டாப் 10 ஆல் டைம் விக்கெட் டேக்கர்களில் இடம் பெற்றுள்ளது இரண்டே இரண்டு வெளிநாட்டு பவுலர்கள் தான். அது ஹசரங்கா மற்றும் ஸ்டார்க். இந்த டாப் 10 விக்கெட் டேக்கிங் பவுலர்கள் பட்டியலில் தற்போதைய அணியில் உள்ள ஹர்ஷல் படேல், சிராஜ் மற்றும் ஹசரங்கா ஆகியோர் இருப்பது ஆர்சிபி-க்கு கிடைத்த ஆறுதல். படு வீக்கான பவுலிங் யூனிட் காரணமாக 200+ ரன்கள் அடித்தாலும் ஆர்சிபி பவுலர்களால் அதை கட்டுப்படுத்த முடிவதில்லை.

ஆர்சிபி சொதப்ப கூடுதல் காரணங்கள்

இப்படியாக ஆர்சிபி அணியின் சொதப்பலுக்கு பல காரணங்கள் நீள்கின்றன. இதற்கு ஆர்சிபி அணி முடிவுரை எழுத வேண்டும். அதுவரை எத்தனை நட்சத்திர வீரர்கள் வந்தாலும், அவர்களால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் செல்ல முடியும். மெய்யான ரசிகர் படையை கொண்ட ஆர்சிபி அணி அதை இனியாவது உணர்ந்து அடுத்த சீசனிலாவது இதையெல்லாம் மாற்ற வேண்டும். இல்லையென்றால் ‘ஈ சாலா கப் நம்தே’ என்பதை எத்தனை சீசன் கடந்தாலும், வெறும் வாய்மொழியாக பேச்சுக்காக மட்டுமே சொல்ல வேண்டி இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்