ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய நிலையில், வெளியில் இருந்து யார், என்ன சொன்னாலும் அது குறித்து கவலை இல்லை என ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கூறியுள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 63 பந்துகளில் விளாசிய 100 ரன்களின் உதவியால் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 187 ரன்கள் இலக்கை எளிதாக எட்டியது. மேலும் இந்த வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.
இந்த ஆட்டத்துக்கு பின்னர் விராட் கோலி கூறியதாவது: கடந்த கால ரன்கள் குறித்து நான்திரும்பி பார்ப்பதில்லை. நான் ஏற்கெனவே என்னை நிறைய மன அழுத்தத்திற்கு உட்படுத்தியுள்ளேன். இது எனது 6-வது ஐபிஎல் சதம்.சிறப்பான ஆட்டங்கள் விளையாடியபோது கூட சில நேரங்களில் எனக்கு நான் மதிப்பு கொடுப்பதில்லை. எனவே, வெளியில் இருந்து யார் என்ன கூறினாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் அது அவர்களின் கருத்து.
ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி விளையாடி வெற்றி பெறவேண்டும் என்பதை அறிவேன். நான் அதை நீண்ட காலமாக செய்து வருகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். ஃபேன்ஸி ஷாட்களை மேற்கொள்ளும் ஆள் நான் இல்லை. வருடத்தில் 12 மாதங்கள் விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஃபேன்ஸி ஷாட்களை விளையாடி என் விக்கெட்டைத் தூக்கி எறிய விரும்பவில்லை. ஐபிஎல்லுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் வருகிறது. நான் எனது தொழில் நுட்பத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் எனது அணிக்காக ஆட்டத்தை வென்று கொடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
» பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? - கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியுடன் இன்று மோதல்
» IPL 2023: PBKS vs RR | ஜெய்ஸ்வால் - படிக்கல் கூட்டணியால் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
டு பிளெஸ்ஸிஸ் வேறு மட்டத்தில் இருக்கிறார். நான் இரு ஆட்டங்களில் நிதானமாக விளையாடினேன். அப்போது வலை பயிற்சியில் மேற்கொண்ட பேட்டிங்கை களத்திற்கு கொண்டுவர முடியாமல் போனது. டி வில்லியர்ஸுடன் இணைந்து எப்படி பேட்டிங் செய்தேனோ, அதுபோன்றுதான் டு பிளஸ்ஸிஸுடன் இணைந்து விளையாடுகிறேன்.
ஆட்டத்தை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்பது பற்றிய நல்ல புரிதல் எங்களுக்குள் இருக்கிறது. ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து டாப் ஆர்டரில் சிறந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். அது தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பெங்களூரு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (21-ம் தேதி), புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் கால் பதிக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago