ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் 7வது வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் மீண்டும் மோசமான பார்மை தொடர்ந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் இருந்த கிளாசன் பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆடினார். அவர் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 104 ரன்களில் அவர் வெளியேறிய பின் கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில், ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.
» இப்படியெல்லாம் ஐபிஎல் போட்டியில்தான் நடக்கும்: டெல்லி - பஞ்சாப் ஆட்டத்தின் மோசமான தரம்
» IPL 2023 | மோஹன் பகான் கால்பந்தாட்ட அணியின் ஸ்பெஷல் ஜெர்சியில் விளையாடும் லக்னோ!
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி - டு பிளசிஸ் கூட்டணி சிறப்பாக விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடியை கையாண்ட இருவரையும் பிரிக்க ஹைதராபாத் பவுலர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.
அரைசதத்துக்கு பின் டு பிளசிஸ் சைலன்ட் ஆக, விராட் கோலி டாப் கியரில் ரன்களை குவிக்க ஆரம்பித்தார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார். சிக்ஸர் அடித்து இந்த தொடரில் முதல் சதம் அடித்த விராட் கோலி, சதம் அடித்த அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். 18வது ஓவரில் தான் இந்தக் கூட்டணியை பிரிக்க முடித்து.
விராட் கோலி அவுட் ஆன சில நிமிடங்களிலேயே 71 ரன்கள் எடுத்திருந்த டு பிளசிஸ்ஸும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடிக்க, 19.2 ஓவரில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பெங்களூரு.
ஹைதராபாத் தரப்பில் நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் பெங்களூரு பெறும் 7வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் ரேஸில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது அந்த அணி. குஜராத் அணியுடன் இன்னும் ஒரு போட்டியில் அந்த அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago