சென்னையில் நடைபெறும் ப்ளே ஆஃப் போட்டி டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை: சிஎஸ்கே நிர்வாகம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

16ஆவது ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் மோதும் போட்டி வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். அதேபோல 3 மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகள் விளையாடும் போட்டி 24ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 2 ப்ளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 7 லீக் போட்டிகளுக்கும் நேரடியாக கவுன்டர் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE