“ஐபிஎல் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தியை மிஸ் செய்தது எங்களுக்கு வேதனையே” - ஸ்டீபன் ஃபிளெமிங்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை மிஸ் செய்தது தங்களுக்கு இன்னும் வேதனை தருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியுடனான போட்டிக்கு பிறகு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

வருண் சக்கரவர்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பவுலராக சில காலம் சென்னை வீரர்களுக்கு பந்து வீசி உள்ளார். அப்போது அவர் வீசும் பந்தை எதிர்கொள்ள சென்னை வீரர்கள் திணறியதாகவும் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். இதில் சென்னை அணியின் கேப்டன் தோனியும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஏலத்தில் வருணை மிஸ் செய்தது எங்களுக்கு இன்னும் வேதனை தருகிறது. நெட் பவுலராக அவர் சென்னை பேட்ஸ்மேன்களை இம்சித்தார். ஆனால், ஏலத்தில் அவரை எங்களால் தக்க வைக்க முடியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் மற்ற அணிகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் அவரது திறன் குறித்து நன்கு அறிந்திருந்தது தான். அதனால் அவர் குறித்த ரகசியத்தை எங்களால் காக்க முடியாமல் போனது. அவர் ஒரு பவுலிங் அஸ்திரம்” என ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து கண்டங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசப்பட்டது. இந்த சூழலில் ஃபிளெமிங், வருண் சக்கரவர்த்தி குறித்து தங்கள் அணியின் விருப்பம் மற்றும் திட்டம் என்னவாக இருந்தது என்பதை பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE